×

ஒளிப்பதிவுப் பிரிவு

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டங்களைத் தமிழ் மக்களின் அவலங்களை வரலாற்று ரீதியாக இன்று வரை நாம் பார்க்கும் வகையில் அன்றே அந்தப் பணியை ஆரம்பித்தவர்கள் ஒளிப்படப்பிரிவு. பெரும் சவால்கள் நிறைந்த காலங்களில் மிக கடுமையாக பணியாற்றித் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்கள். இதில் பல போராளிகள் கள சண்டையிலும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின்  நிதர்சனம் மற்றும் புலிகளின்குரல் நிறுவனங்களின் முதலாவது பொறுப்பாளராக இருந்தவர் படப்பிடிப்பாளர் பரதன் அண்ணா. தென்மராட்சி மீசாலையில் “எம்.ஜி .ஆர். வீடியோ சென்ரர்” என்ற பெயரில் கப்டன் தீப், தவா, பரதன், புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் ஒளிக்கலையகம் ஒன்றை அமைத்து அதன் மறைவில் வேலைகளைத் தொடர்ந்தனர். பழைய ஆவணங்களைப் பாதுகாப்பது, புதிய விவரணம் ஒன்றைத் தயாரிப்பதற்கான படப்பிடிப்புக்களில் ஈடுபடுவது இவர்களுடைய வேலை.

இந்தியப்படைகளுக்கு முதலில் எம்.ஜி.ஆர் என்ற பெயரில் ஐயப்பாடு இல்லை. கப்டன் தீப், தவா போன்றோர் இந்தியப் படைகளின் நகர்வுகளை மறைமுகமாக இருந்து படம் பிடித்தனர். இந்தியப் படைகள் செய்த படுகொலைகள் பற்றி மக்களிடம் பேட்டிகளைப் பதிவு செய்தனர். இவர்களது பணிகள் இந்தியப் படைகளின் சந்தேகத்திற்கு இடமாகவே ஆவணங்களை தகுந்தமுறையில் மறைத்துவிட்டு வன்னி நோக்கிப் பயணமாகின்றனர். “பப்பா அல்பா” என்ற சங்கேதப் பெயருடைய வன்னிக் கானகமுகாம் ஒன்றில் வைத்து நிதர்சனத்தின் பணிகள் தொடர்கின்றன. ஒரு சிறிய கலையகத்தை அமைத்து ஒலிப்பதிவு, படத்தொகுப்பு வேலைகள் தொடங்குகின்றன.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிளும் பேட்டிகளும் சேர்க்கப்பட்டு விவரணம் ஒன்று தயாராகின்றது. “இந்திய அரச பயங்கரவாதம் – பாகம் 01, பாகம் 02” என்ற பெயருடைய விவரணம்தான் உலகிற்கு முதன் முதலில் இந்தியப் படைகள் ஈழத்தில் செய்தது என்ன என்பதை தெளிவாக்குகின்றது. இந்த விவரணத் தயாரிப்புக்களை தவா, தீப் ஆகியோர் காட்டுக்குள் இருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் உள்ள வீடியோக் கடைக்காரர்களை அணுகி சமூக நிகழ்வுகளைப் படம் பிடிக்கும்போது இந்தியப்படைகளின் காட்சிகளையும் படம்பிடித்துத் தருமாறு கேட்டு அக்காட்சிகளைப் பெற்று விவரணத்தில் இணைத்தனர்.

வன்னி வாழ்க்கையில் மக்களின் எழுச்சி நிகழ்வுகள், குண்டு வீச்சுக்கள். போராளிகளின் பயிற்சி முகாம் படப்பிடிப்புக்கள், அடையாள அட்டைப் படம் எடுத்தல், விளையாட்டுக்கள் என்று அனைத்தையுமே படம்பிடித்தார்கள். காலப் போக்கில்  பல புதிய போராளிகள் வந்திணைய அவர்களையும் ஒளிப்பதிவுப் பிரிவு இணைத்துக்கொண்டார்கள்.

கோட்டை, மாங்குளம், கொக்காவில் போன்றவை மிக முக்கியமானவை. 1991 இன் பின்னர் நிதர்சனத்தோடு மீண்டும் இணைந்த தவா வன்னிப்பகுதிப் படப்பிடிப்புக்குப் பொறுப்பாகத் தனது பணியைத் தொடர்ந்தார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments