×

கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – 23.05.1990

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் வந்தாறுமூலைக் கிராமத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களில் கிழக்குப் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இப் பல்கலைக்கழகமே தென்கிழக்குப் பல்கலைக்கழகம். 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட முன்னர் கிழக்கு மாகாணத்திலிருந்த ஒரேயொரு உயர்கல்வி நிறுவனம் இப் பல்கலைக்கழகமாகும்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மூவாயிரம் மாணவர்கள்வரை ஆண்டுதோறும் கல்விகற்கிறார்கள். இவர்களில் ஏறக்குறைய ஐநூறு – எழுநூறு வரையான பட்டதாரிகள் ஆண்டுதோறும் வெளியேறுகின்றார்கள். இப் பல்கலைக்கழகத்தில் கலை, வர்த்தகம், முகாமைத்துவம், விஞ்ஞானம், பௌதீகவியல், கணினி, இசை, நடனம் போன்ற பல்வேறு துறைகள் தமிழ்மொழி மூலம் கற்பிக்கப்படுகின்றன.

1990 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதன் விளைவாகப் பொதுமக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்தார்கள். உலகத்தில் பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாப்பதற்காகச் தஞ்சமடைவது வழக்கமாகும்.

அவ்வாறே கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர். 1990.05.23 அன்று சத்துருக் கொண்டான் இராணுவ முகாமிலிருந்து பெருந்தொகையான இராணுவத்தினர் வாகனங்களில் பல்கலைக் கழகத்திற்கு வந்து பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த இளைஞர்களில் ஐம்பத்தெட்டுப் பேரைக் கைதுசெய்து கைகள், கால்கள் கட்டி இராணுவ வாகனங்களில் ஏற்றி எல்லையோரக் கிராமங்களுக்கு கொண்டு சென்று, கைது செய்தவர்களைத் துப்பாக்கிகளால் சுட்டும், ஏனைய கூரிய ஆயுதங்களினால் தாக்கிப் படுகொலை செய்தனர். 1990.05.24 இல் மீண்டும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வந்த இராணுவத்தினர் அங்கு தஞ்சமடைந்திருந்த நூற்றிஅறுபத்தெட்டுப் பொதுமக்களை வயது வேறுபாடுகள் இன்றிக் கைதுசெய்து கொண்டு சென்று, முதல் நாள் போன்றே இவர்களையும் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக தமது வீடுகள், சொத்துக்கள் உடப் ட அனைத்து உடமைகளையும் இழந்து மூன்று வேளை உணவினை ஒழுங்காக உண்ண முடியாமல் அகதிகளாக இருந்த பொதுமக்களில் இருநூற்றிஇருபத்தாறு பேர் இராணுவத்தினரால் கைதுசெய்து கொண்டு செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அத்துடன், பலர் காணாமல் போனார்கள்.

23.05.1990 அன்று கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. இளையதம்பி பாக்கியநாதன் (வயது 22 – தொழிலாளி)
  2. இராசையா ஜெயநாதன் (வயது 35 – தொழிலாளி)
  3. இராசையா டேவிட் (வயது 34 – சாரதி)
  4. இராசதுரை கனகசபை (வயது 18 – கடற்றொழில்)
  5. நாகராசா ரகுநந்தன் (வயது 27 – தொழிலாளி)
  6. நடராசா ஜோச்ஸ்ரான்லி (வயது 39 – அரச ஊத்தியோகத்தர்)
  7. நடேசன் சுப்பிரமணியம் (வயது 29 – சுயதொழில்)
  8. நவரத்தினம் பிரியதர்சினி (வயது 05)
  9. நல்லதம்பி மகேந்திரன் (வயது 28 – தொழிலாளி)
  10. நல்லதம்பி நாகராசா (வயது 25 – சுயதொழில்)
  11. கந்தையா கதிரவேல் (வயது 20 – தொழிலாளி)
  12. கந்தையா தவராசா (வயது 18 – தொழிலாளி)
  13. கந்தையா ஆனந்தரெட்ணம் (வயது 28 – கடற்தொழில்)
  14. கந்தையா செல்வராசா (வயது 28 – தொழிலாளி)
  15. கந்தப்போடி ஜெயசீலன் (வயது 19 – தொழிலாளி)
  16. கந்தப்போடி செல்வராசா (வயது 45 – தொழிலாளி)
  17. கந்தசாமி நவரெட்ணம் (வயது 19 – சுயதொழில்)
  18. கந்தசாமி சிறிஸ்கந்தராசா (வயது 24 – சுயதொழில்)
  19. கதிராமப்போடி பரமேஸ்வரி (வயது 31 – வீட்டுப்பணி)
  20. கணேசன் தியாகராசா (வயது 24 – தொழிலாளி)
  21. கிருஸ்ணப்பிள்ளை முருகேசு (வயது 24 – தொழிலாளி)
  22. கருணாகரன் அருணாசலம் (வயது 29 – தொழிலாளி)
  23. கணபதிப்பிள்ளை தங்கத்துரை (வயது 25 – சுயதொழில்)
  24. கணபதிப்பிள்ளை முருகையா (வயது 18 – தொழிலாளி)
  25. பூபாலப்பிள்ளை தெய்வேந்திரமூர்த்தி (வயது 33 – அரச ஊழியர்)
  26. பஞ்சாசரம் நடராசா (வயது 25 – தொழிலாளி)
  27. வைரமுத்து புஸ்பராசா (வயது 40 – சுயதொழில்)
  28. வைரமுத்து தர்மலிங்கம் (வயது 60 – சுயதொழில்)
  29. தாமோதிரம் வள்ளிப்பிள்ளை (வயது 77 – விவசாயம்)
  30. தம்பிஜயா ஜெகன் (வயது 11)
  31. தம்பியப்பா வினாயகமூர்த்தி (வயது 26 – சாரதி)
  32. தம்பிமுத்து பீதாம்பரம் (வயது 18 – மாணவன்)
  33. மார்க்கண்டு மகேந்திரன் (வயது 19 – தனியார்தொழில்)
  34. மாமாங்கம் சண்முகநாதன் (வயது 18 – கடற்தொழில்)
  35. மாரியப்பா தமிழ்ச்செல்வன் (வயது 15 – மாணவன்)
  36. முத்தையா கந்தசாமி (வயது 19 – மாணவன்)
  37. முத்துப்பிள்ளை தருமலிங்கம் (வயது 69 – தொழிலாளி)
  38. மூத்ததம்பி சின்னமுத்து (வயது 70)
  39. முத்துலிங்கம் மோகனசுந்தரம் (வயது 27 – கடற்றொழில்)
  40. மகேந்திராஜா சிலக்சனா (வயது 06)
  41. அமிர்தலிங்கம் ஜெயசங்கர் (வயது 36 – சுயதொழில்)
  42. அழகிப்போடி குமார் (வயது 21 – மாணவன்)
  43. அழகையா யோகராசா (வயது 19 – தொழிலாளி)
  44. அருமைத்துரை விமலன் (வயது 18 – தொழிலாளி)
  45. அருமைத்துரை இன்பம் (வயது 18 – சுயதொழில்)
  46. அருணாச்சலம் சின்னத்தம்பி (வயது 44 – கடற்றொழில்)
  47. ஆறுமுகம் கந்தலிங்கம் (வயது 30 – சுயதொழில்)
  48. ஆறுமுகம் கிருபாமூர்த்தி (வயது 26 – தொழிலாளி)
  49. ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை (வயது 22 – தொழிலாளி)
  50. ஆறுமுகம் விவேகானந்தன் (வயது 29 – தனியார்தொழில்)
  51. அல்போன்ஸ் நெல்சன் (வயது 18 – மாணவன்)
  52. ஜோசப் சுந்தரலிங்கம் (வயது 33 – தொழிலாளி)
  53. ஜோசப் சிவகுமார் (வயது 16 – தொழிலாளி)
  54. கே.கனேஸ்வரி (வயது 26 – தனியார்தொழில்)
  55. கே.சீதேவி (வயது 05)
  56. கோ.மகேந்திரன் (வயது 27 – சுயதொழில்)
  57. சோமலிங்கம் வாசகன் (வயது 70 – அரச ஊழியர்)
  58. செல்லையா உதயநாதன் (வயது 27 – விவசாயம்)
  59. செல்லையா சுப்பிரமணியம் (வயது 59 – சுயதொழில்)
  60. செல்வராசா உதயகுமார் (வயது 31 – சுயதொழில்)
  61. செல்வராசா நவரெத்தினம் (வயது 27 – தொழிலாளி)
  62. வெள்ளைச்சாமி கண்ணையா (வயது 45 – விவசாயம்)
  63. வேலுப்பிள்ளை பாக்கியராசா (வயது 32 – சுயதொழில்)
  64. வேலுப்பிள்ளை யோகன் (வயது 30 – சுயதொழில்)
  65. வேலுப்பிள்ளை ராசு (வயது 22 – தொழிலாளி)
  66. ஞானமூர்த்தி கதிர்காமத்தம்பி (வயது 20 – தனியார்தொழில்)
  67. சுப்பையா பாலசுப்பிரமணியம் (வயது 40 – சுயதொழில்)
  68. சுப்பையா எட்மன் (வயது 19 – சுயதொழில்)
  69. சதாசிவம் குபேரன் (வயது 19 சுயதொழில்)
  70. சி.சரோசாதேவி (வயது 45 – தனியார்தொழில்)
  71. சின்னப்பு யோகராசா (வயது 28 – சுயதொழில்)
  72. சின்னத்துரை புஸ்பராசா (வயது 22 – கடற்றொழில்)
  73. சின்னத்தம்பி யோனாஸ் (வயது 35 – சுயதொழில்)
  74. சின்னராசா ராஜேந்திரம் (வயது 23 – மாணவன்)
  75. சீனித்தம்பி பிள்ளைநாயகம் (வயது 22 – தொழிலாளி)
  76. சித்திரவேல் சதாநந்தகுமார் (வயது 16 – மாணவன்)
  77. சிதம்பரம்பிள்ளை தணிகாசலம் (வயது 40 – அரச ஊழியர்)
  78. சிவகுரு நடராசா (வயது 37 – சுயதொழில்)
  79. சிவசுப்பிரமணியம் கிருபாகரன் (வயது 21 – மாணவன்)
  80. சிவலிங்கம் செல்லத்தம்பி (வயது 21 – சுயதொழில்)
  81. சண்முகம் செல்வரெத்தினம் (வயது 16 – மாணவன்)
  82. வீரக்குட்டி பாலகப்பொடி (வயது 55 – தொழிலாளி)
  83. எ.காசுபதி (வயது 74 – தொழிலாளி)

காயமடைந்தவர்களின் விபரம்:

  1. இந்துமதி (வயது 15 – மாணவி)
  2. புலேந்திரன் சாந்தமேரி (வயது 04)
  3. தம்பியப்பா குழந்தைவேல் (வயது 25 – சுயதொழில்)
  4. தங்கராசா பிரபானந்தராசா (வயது 27 – சுயதொழில்)
  5. சீ.சம்புரணநாதன் (வயது 27 – சுயதொழில்)
  6. சித்திரவேல் மணிமேகலை (வயது 18 – தொழிலாளி)

காணாமற்போனவர்களின் விபரம்:

  1. இராஜேஸ்வரி ரஞ்சன் (வயது 27 – தொழிலாளி)
  2. இராசநாயகம் சிவலோகநாயகி (வயது 17 – அரச ஊழியர்)
  3. ந. கிருபாகரன் (வயது 22 – தொழிலாளி)
  4. கந்தையா முத்துவடிவேல் (வயது 17 – தொழிலாளி)
  5. குட்டியாண்டி இராமசாமி (வயது 22 – மாணவன்)
  6. தம்பியப்பா சகாயராசா (வயது 25 – தொழிலாளி)
  7. மாடசாமி சங்கர் (வயது 22 – மாணவன்)
  8. செல்வநாயகம் ஜெயராசா (வயது 21 – விவசாயம்)
  9. சா.வினோராஜ் (வயது 22 – மாணவன்)
  10. சாமுவேல் யோகேந்திரன் (வயது 19 – தொழிலாளி)

கைது செய்யப்பட்டவர்களின் விபரம்:

  1. நாகராஜா கணேசமூர்த்தி (வயது 19 – சுயதொழில்)
  2. கந்தசாமி வசந்தராஜன் (வயது 27 – சுயதொழில்)
  3. ஐயாத்துரை ஜெயராசா (வயது 78 – சுயதொழில்)
  4. தர்மலிங்கம் கனகசிங்கம் (வயது 33 – தொழிலாளி)
  5. தம்பிப்பிள்ளை சுந்தரமூர்த்தி (வயது 20 – கடற்றொழில்)
  6. கோபாலன் யோகராசன் (வயது 17 – தொழிலாளி)
  7. பெனான்டோ ஜெயக்குமார் (வயது 19 – சுயதொழில்)
  8. செல்வம் சுந்தரேசன் (வயது 18 – தொழிலாளி)
  9. வெற்றிவேல் யோகராசா (வயது 21 – சுயதொழில்)
  10. வேலப்பன் ரவீந்திரகுமார் (வயது 19 – விவசாயம்)
  11. சுப்பிரமணியம் சுதாகரன் (வயது 16 – சுயதொழில்)
  12. சபாரட்ணம் ஜேசுதாசன் (வயது 30 – சாரதி)
  13. சம்புநாதபிள்ளை தர்மராஜா (வயது 25 – சாரதி)
  14. சின்னையா கந்தையா (வயது 31 – சுயதொழில்)
  15. சிவலிங்கம் ரவிநாதன் (வயது 24 – சுயதொழில்)

 

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments