×

ஊர் நோக்கி – ஆனையிறவு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட உலக கேந்திர முக்கியத்துவமான இரணுவ முக்கியத்துவமான இடமாக போத்துகேயர் காலத்தில் இருந்து இன்றுவரை காணப்படுகிறது. குறிப்பாக போத்துக்கேயர் வன்னி மற்றும் யாழ்ப்பாண இராசதாணிகளைப் பிரிப்பதற்கு மற்றும் கண்காணிப்பதற்கு 1760 ம் ஆண்டு ஒரு கோட்டை ஒன்றை கட்டியெழுப்பினர். பின்னர் 1776 டச்சுகாரர் புணரமைத்தும் பின்னர் ஆங்கிலேயராலும் இந்த இடம் கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பு அரணாகவும் இருந்தது.

1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் இங்கே பெரிய இராணுவத்தளத்தை அமைத்தது. உளநாட்டு யுத்தத்தில் 2000 ம் ஆண்டுவரை விடுதலைப் புலிகள் பல முறை முயன்றும் இத்தளத்தை கைப்பற்ற முடியாமல் போனது.

2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22-ம் திகதி விடுதலைப்புலிகள் இத்தளத்தை கைப்பற்றினர். ஆனையிறவு யுத்ததிற்கு மட்டுமான இடமல்ல இது ஒரு பறைவைகள் சரணாலயம் என்பதுடன் உப்பு வளமிக்க கடல் நீர் ஏரியும் கடற் சமவெளியுமாகும். கடல் மட்டத்தில் இருந்து 03 கிலோ மீற்றருக்கு மேல் காணப்படுகின்றது. ஆனையிறவு போத்துகேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், இலங்கை என பல இராணுவ ஆக்கிரமிப்பால் பல முக்கியத்துவங்கள் இங்கு அழிந்துவிட்டது.

இலங்கையின் முதன்மை உப்பு உற்பத்தி நிலையமாக காணப்படுகிறது. இலங்கையில் 1938 ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உப்பளமாக ஆரம்பிக்கப்பட்டது. 1946 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இந்த உப்பளம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பெரிய உப்பளம் ஆனையிறவிலும் 777 ஏக்கர் கொண்டது.  குறிஞ்சாதீவு உப்பளம் சின்ன உப்பளமாகும் 1169 ஏக்கர். இந்த இரண்டு உப்பளங்களும் ஆனையிறவு கடல்நீரேரியில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இங்கு விளையும் உப்பில் இருந்து பரந்தன் இராசாயணத் தொழிற்சாலையில்; இராசாயணப் பொருட்கள் தயாரிக்கப்பட்டது சில கைத் தொழிலும் சில நடந்து வந்தது.

வருடாந்தம் 50 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 1990 முன் நாட்டின் தேவைக்கு மீதமான உப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது வட பகுதிக்கு மிகப் பெரும் பொருளாதார பலமாக உள்ளது. தற்போது 2016 ம் ஆண்டு மீள ஆரம்பிக்கப் பட்டது ஆனால் முழுவீச்சில் நடைபெறவில்லை. இங்கு இத்தொழில் முழுவீச்சில் நடந்தால் 3000 பேருக்கு வேலைவாய்பை நேரடியாகக் கொடுக்க கூடிய ஒரு வளமிக்க இடமாகும். உப்பு உற்பத்தியைத் தவிர இறால் பிடிப்பு சிறு மீன்பிடி தொழில் என பல வளமிக்க நிலப்பரப்பு ஆனையிறவு ஆகும்.

இங்கே சிறந்த தூய வெள்ளைநிற உப்பு விளையக் காரணம் அதிக வெப்பநிலை அதிக காற்று குறைந்த மழைவீழ்ச்சி  என்பன இயற்கைக் காரணமாக உள்ளது.
ஆனையிறவு ஒரு பறவைகள் சரணாலயமாகவும் காணப்படுகின்றது. இலங்கையின் பறவைகள் சரணாலயத்தில் முக்கியமான சரணாலயம் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமாகும். அதற்கு அருகில் காணப்படும் கடல்நீரேரி ஆனையிறவு என்பதால்  அதிகமான வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து போவதை காணக்கூடியதாக இருக்கும். ஆனையிறவுக்கு அருகில் இருக்கும் தட்டுவன்கொட்டி மக்கள் இந்த கடல்நீரேரியில் மீன்பிடி மற்றும் இரால் பிடிக்கும் தொழில் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவில் பொழிகின்ற மழை குளங்களில் சேமிக்கப்பட்டு மிகுதி மழைநீர் தன்னோடு கொண்டு வரும் குப்பைகள் கழிவுகளை நம்பி ஆனையிறவு கடல்நீரேரி மீன்கள் தமது உணவுக்கும் இந்து சமூத்திர மீன்களின் இனப்பெருக்கத்துக்கும் இந்த ஆனையிறவு கடல்நீரேரிக்கு நன்நீரை இணைக்கிறாள் இரணைமடு அன்னை.

ஆனையிறவு இது எம் தமிழர்களின் குருதியில் குளித்து வீர மறவர்களை உடலோடு அணைத்து வீர தீர செயல்களில் புறம் பாடும் வீரப்பரம்பரை. தமிழர்தம் உயிர் மூச்சாம் தன்மானத்தை அள்ளி விதைக்கும். உப்போடும் உணர்வோடும் உலகுக்கு உணர்த்தும் ஒரு பிரதேசமாகும்.

ஆக்கம்
வட்டக்கச்சி
வினோத்

ஊசாத்துனை
இணையம்
விக்கிபிடியா

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments