×

கோவலன் பொட்டல்.

மதுரை பழங்காநத்தம் அருகில் கோவலன் பொட்டல் என்ற பெயரில் ஓர் இடம் அமைந்துள்ளது. இவ்விடம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே இறந்தவர்களை புதைக்கும் இடமாக இப்பகுதி விளங்கியுள்ளது என்பதற்கு சான்றாக 1980 ஆம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறை நடத்திய அகழாய்வின் போது குழிகளில்  எலும்புகள் உடன் முதுமக்கள் தாழிகள் கிடைத்தன, எலும்புகளை ஆய்வு செய்த போது நடுத்தர வயது உடைய ஓர் ஆணின் எலும்புகள் 1800 ஆண்டுகள் முற்பட்டது என ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
கோவலன் பொட்டல் பகுதியில் சங்க கால நாணயங்கள், செம்பு வளையல்கள் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கற்கால கருவிகள்   கிடைத்துள்ளது, அகழாய்வின் போது கிடைத்த பொருட்கள் தற்போது மதுரை நாயக்கர் மஹாலில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்த இடம் இந்த கோவலன் பொட்டல் ஆக  இருந்திருக்கக்கூடும்.  ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் இவ்விடம்  கோவலன் பொட்டல் என்ற பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறது   பன்னெடுங்காலமாக இவ்விடம் ஒரு இடுகாடாக இருந்துள்ளது இங்கு கிடைத்த அகழாய்வு பொருட்கள் சான்றாக அமைகிறது.
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments