×

வன்னியில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள்

வன்னியில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் ஸ்ரீலங்கா அரசால் பாதுகாப்பு வலையம் என்று பிரகடனம் செய்யப்பட்ட பகுதிக்கு வந்த தமிழீழ மக்களை ஏன் ஸ்ரீலங்கா இனவாத மேலாதிக்க அரசின் இராணுவத்தினர் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

சகோதரன், கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

29.01.2009

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments