×

இராமநாதபுரம் அரசின் 12 ஆவது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார்.

இராமநாதபுரம் அரசின் 12 ஆவது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். ஆர்காட்டு நவாபுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அடங்கி அரசு செலுத்த மறுத்து, சிறையில் 24 ஆண்டுகள் அடைக்கப்பட்டுக் கிடந்து 1809 இல் இறந்தார்.

கப்பத்தொகை கேட்டு தவாப் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியின் படைகள் இராமநாதபுரம் கோட்டையை 29.05.1772 அன்று முற்றுகையிட்டன. கோட்டை வாயிலில் 3000 வீரர்கள் போரிட்டு மடிந்தனர். சேதுபதியின் தாய் மற்றும் அவருடைய இரண்டு மகள்கள், 12 வயது சிறுவனாகிய சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். 1781 இல் சேதுபதி மன்னர் ஆட்சியைத் தொடர அனுமதிக்கப்பட்டார். முத்துராமலிங்கம் சேதுபதி மன்னர் ஆட்சியைத்தொடர அனுமதிக்கப்பட்டார். முத்துராமலிங்க சேதுபதி டச்சுக்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இராமநாதபுரம் காட்டுப்பகுதியில் பீரங்கிகளைத் தயாரித்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்தார். சேதுபதி ஆங்கிலேயர்களுக்குச் சலுகைகளை அளிக்க மறுத்துவிட்டார்.

கி.பி 1794 இல் திருநெல்வேலி கலெக்டர் பவ்னியிடமிருந்து நேரில் ஆஜராக வந்த அழைப்பை சேதுபதி பிறக்கணித்தார். தளபதி ஸ்டீவன்சன் தலைமையில் பாளையங்கோட்டையிலிருந்து வந்த ஆங்கிலப்படை இராமநாதபுரம் கோட்டையை 1795 பிப்ரவரி 8 அன்று சூழ்ந்தது. கைது செய்யப்பட்ட சேதுபதி திருச்சிக்கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சேதுபதி நாட்டு மக்கள் அவர் கொடுக்க மறுத்து புரட்சி செய்தனர். காவல் நிலையங்களில் தாக்கப்பட்டு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டன. அருகிலிருந்த பாளையங்களும் புரட்சியில் ஈடுபட்டன.

ஆங்கில நிர்வாகம் படைகளை மலேசியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரவழைத்தது. மக்கள் புரட்சிகள் ஒடுக்கப்பட்டன.  சேதுபதியை திருச்சியில் இருந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குக் கொண்டு சென்று ஓர் இருண்ட அறைக்குள் அடைத்தனர். அங்கே அவர் 14 ஆண்டுகளைக் கழித்தார். தமது 48 ஆண்டுகால வாழ்நாளில் 24 ஆண்டுகளைச் சிறையில் அகழ்ந்த சேதுபதி, 1809 ஜனவரி  23 அன்று சிறையிலேயே உயிர் துறந்தார்.

நன்றி. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments