×

10ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன்,

10ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன், இலங்கையின் தலைநகரமாக இருந்த அனுராதபுரத்தைக் கைப்பற்றியதுடன், போரில் அழிந்து போன அனுராதபுர நகரை கைவிட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவையை தலைநகரமாக்கினான் 1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

அதனைத் தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது. சோழர் ஆட்சிக் காலத்தில் பல சைவாலயங்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டதுடன் அவற்றின் தற்போதைய தோற்றங்களைப் படங்களில் காணலாம்.

புகைப்படங்கள் உதவி பிரவீன் நகுலேஸ்வரன்! Praveen Naguleshwaran

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments