×

சம்மாந்துறைப் படுகொலை – 10.06.1990

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறைப் பிரதேசசெயலர் பிரிவில் சம்மாந்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் வயல்களைக் கொண்ட விவசாயக் கிராமம் ஆகும். இப்பிரதேசத்தில் கண்ணகி அம்மன் கோயில், காளி கோயில் போன்ற பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன.

1990.06.10அன்று முஸ்லீம் குழுக்கள் இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் இங்கு நடத்தினார்கள். இவர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக ஓடிய பொதுமக்கள் மீது இராணுவத்தினர் சுட்டதில் பலர் உயிரிழந்தனர். அன்று இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் நடாத்திய தாக்குதலில் முப்பத்தேழு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.

10.06.1990 அன்று சம்மாந்துறைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. இராசரட்ணம் இராமச்சந்திரன் (வயது 19 – கூலி)
  2. க.வடிவேல்
  3. த.தாசன்
  4. தம்பிராசா உருத்திரன் (வயது 16 – மாணவன்)
  5. மா.கணபதிப்பிள்ளை
  6. சு.கணேசன்
  7. சின்னத்தம்பி மார்க்கண்டு

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments