×

ஐரோப்பிய கிளப் வரலாற்றில் முதன்முறையாக பயிற்சியாளராக ஈழத் தமிழர்.. முத்திரை பதித்த சஞ்சீவ் மனோகரன்

ஒஸ்லோ : நார்வேயின் முக்கியமான கால்பந்தாட்ட கிளப்களில் ஒன்று FK Haugesund. இதன் முதன்மை பயிற்சியாளராக சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற ஈழத் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதே கிளப்பின் வளர்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த அவர், தற்போது தற்காலிக முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

டென்மார்க்கில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழரான சஞ்சீவ் மனோகரன். இந்த கிளப்பில் இணையும் முன் பத்தாண்டுகளுக்கு மேலாக டென்மார்க்கின் சூப்பர் லிகா தொடரில் இடம் பெற்று ஆடும் ஏசிஎஃப் கிளப்பின் பத்து அண்டர் 10 முதல் அண்டர் 19 வரையிலான ஜூனியர் அணிகளுக்கான பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சி பெற்று இவர் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணாவின் மகள்வழி பேரன் ஆவார்.

ஐரோப்பா நாடுகளின் முதல்தர கால்பந்து கிளப் அணிகளில் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற முதல் ஈழத் தமிழர் சஞ்சீவ் (சண்) மனோகரன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments