×

தமிழ் கட்டிடக்கலை

தாம் வாழும் இடத்திற்கு ஏற்ப நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்த தமிழர் அவ்வப்பகுதியில் கிடைக்கும்மூலப்பொருள்களைக் கொண்டே தமது வாழிடங்களை அமைத்துக் கொண்டமையைச் சங்க இலக்கியம் நமக்குக் காட்டுகிறது.

இலக்கியத்தில் தமிழர் கட்டிடக்கலை

வீடுகள் அமைப்பதில் சில முறைகள் அக்காலத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார் டாக்டர் உ. வே. சாமிநாதையர். நெடுநல்வாடையில்: “பெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து” என்பதனால் அவரவர்களுக்கேற்றபடி மனைகள் அமைக்கும் வழக்கம் இருந்ததென்பதை அறியலாம். வீடுகள்கட்டுவதற்கு கடைக்கால் (அத்திவாரம்) போடும் காலம் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. கோபுரங்களும், வாயின் மாடங்களும், நிலா முற்றங்களும், அறைகளும் அமைக்கப்பட்டன. வீடுகளின் நிலைகளிற் சித்திர வேலைகள் செய்யப்பட்டிருந்தன. மாடங்களாகவே சில வீடுகள் கட்டப்பட்டிருந்தன. காற்று ஓட்டத்திற்காக வீட்டின் சுவர்களிற் பலவகைச் சாளரங்கள் வைப்பதுண்டு. இவை காலதர் என்று கூறப்படும்.

இன்று நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருப்பது போன்ற ‘பாதாளச் சாக்கடை’முறைமை பழந்தமிழ்ச் சமூகத்தில் இருந்தது என்பதனை இலக்கியப்பதிவுகள் உணர்த்துகின்றன.

நீர் மறைவாகச் செல்லும் இம்மாதிரியான அமைப்பு வீடுகளில் இருந்தமையைப் பரிபாடல் காட்டுகின்றது. கல்லால் அடைக்கப்பட்ட இவ்வழிகள் இருந்தமையை ‘பாருடைத்த குண்டகழி’ ‘கல்லகழ் கிடங்கு’ ‘கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க்கிடங்கு’ முதலிய தொடர்களும் வலியுறுத்துகின்றன.

சமுதாய வளர்ச்சியின் ஓர் அங்கமாக அமையும் நகரங்கள் பற்றி சங்கத்தமிழ் விரிவாகவே எடுத்துரைக்கின்றது எனலாம்.

‘மாடம் பிறங்கிய கூடல்’ ‘மாடமலிமறுகிற் கூடல்’ என மதுரையும், ‘முட்டாச் சிறப்பின் பட்டினம்’ எனக் காவிரிப்பூம்பட்டினமும் வஞ்சி நகரும், உறந்தை, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருச்செந்தூர் , திருஆவினன்குடி, பழனி, திருவேரகம், சுவாமிமலை , குன்றுதோராடல், பழமுதிர்ச்சோலைகொற்கை, எயிற்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம் கொற்கை, குமரி, தொண்டி, மாந்தை, முசிறி எனப் பல நகரங்களும் ஊர்களும் சுட்டப்படுகின்றன.

பண்பாட்டியல் வளர்ச்சியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உச்சத்தைத் தொட்ட தொல்குடி தமிழினம். அந்த வகையிலே கலை, அறிவியல் சார்ந்ததொழில்நுட்பங்களில் இன்றளவும் வியப்போடு உலகே நிமிர்ந்து பார்க்கும்  சாதனைகளோடு  நுண்ணிய கூறுகளை உள்ளடக்கியது. இங்குகட்டிடக்கலை என்றாலே அதனுடன் சிற்பக்கலை பிரிக்க முடியாதவையாகிப் போகின்றன.

சிற்பக்கலை

சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள்செதுக்கப்பட்டன. பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களானவை சிறப்புமிக்க எடுத்துக்காட்டு. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள்”மண்ணீட்டாளர்கள்” எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்து.

அணை

தமிழ்நாட்டில் உள்ள உலகப் பழமை வாய்ந்த கல்லணை இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலனால் கட்டப்பட்டது. காவிரி மீது கட்டப்பட்டுள்ள இந்தஅணை திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆற்றின் கிளை கல்லணையை வந்தடைகிறது.

கோவில்கள்

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சை பெருவுடையார் கோயில் என்றும் அறியப்படும் தஞ்சை பெரிய கோயிலை முதலாம் இராஜராஜ சோழன்11 ஆம் நூற்றாண்டில் கட்டுவித்தான். 1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 ஆண்டுநிறைவடைந்தது.

ஐராவதீசுவரர் கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவில் இரண்டாம் ராஜ ராஜனால்12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அழியாத சோழர் பெருங்கோயில்களில் இதுவும் ஒன்று.

உலகின் மிகப்பெரிய கோவிலை இரண்டாம் சூரியவர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்றஇடத்தில் கட்டியுள்ளான். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரியது.

கட்டிடக்கலை வல்ல தொழிலாளர்கள் பலரும் மிகப்பெரும் நுட்பத்தோடு செயலாற்றிய சிறப்புடையவர்களாக இருந்தனர். ஆகவேதான் அவர்கள்தொழிலாளர் என்று குறிப்பிடப்படாமல் வல்லுநர்களாகச் சுட்டப்படும் பான்மையைச் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments