×

ஊர் நோக்கி அரியாலை

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒரு அழகிய கிராமமாகும். மருதம், நெய்தல் என பண்டைய தமிழர் நிலவுடமைகளுடன் செழித்து நிற்கும் உப்பு வளம், கடல்நீரேரி மற்றும் மருதம் செழிக்கும் வயல் நிலம் தென்னந் தோப்புகள் பனைமரக் காடுகளும் நிறைந்து கிடக்கும் ஒரு வளம் செழிக்கும் ஊராக அரியாலை இருக்கிறது. பண்டைய காலத்து தென்னிந்திய அரசவழித் தொடர்புகளும் தென்னிந்திய அரச கடல்வெளி போக்குவரத்தும் அரியாலை ஊடாக நடந்துள்ளுது. அதிக அரிவு ஆலைகள் இருந்ததன் காரணமாக அரியாலை என பெயர் மருபி ஊரின் பெயராக மாறியுள்ளது.

நிறைந்த கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், போராளிகள் மாவீரர்கள் மற்றும் தளபதிகள் என எம் தேசத்துக்கு பணியாற்றும் மற்றும் பணியாற்றியவர்களை கொடுத்தது இந்தக் கிராமம். போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் இடமாக அரியாலை 1995 வரை இருந்தது.
பல பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் என சமூக செயற்பாட்டில் முன்னிற்கும் ஒரு சிறந்த பிரதேசமாக அரியாலை காணப்படுகின்றது. ஒரு தேசிய காற்பந்தாட்ட விளையாட்டு அரங்கம் அரியாலையில் அமைந்துள்ளது.

சமய நல்லிணக்கம் சைவசமய கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் அதிகம் காணப்படுகின்றது.

அரியாலையின் முக்கிய இடங்கள், பிரபலமானவர்கள்:

• ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
• முத்து வைரவர் ஆலயம்
• அரியாலை சிவன் கோயில்
• பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
• கொட்டுக்கிணைற்றுபிள்ளையார் கோயில்
• ஜயனார் கோயில்
• ஸ்ரீ முத்தி விநாயகர் கோயில்
• சித்துப்பாத்தி வைரவர் கோயில்
• யூதா மாதா ஆலயம்
• ஸ்ரீ நாக கனகாம்பிகை ஆலயம்
• கண்ணகி அம்மன் கோயில்
• ஸ்ரீ வீரபத்திரர் கோயில்
• நெடுங்குளம் பிள்ளையார் கோயில்
• கொழும்புத்துறை முத்து மாரியம்மன் கோயில்
• கொழும்புத்துறை வைரவர் கோயில்
• கொழும்புத்துறை நரசிங்க வைரவர் கோயில்
• யோகசுவாமி அனுஸ்டான மண்டபம்
• இலந்தைகுளம் பிள்ளையார் கோயில்
• உப்புக்குளம் பிள்ளையார் கோயில்
• சென் மரியா தேவாலயம்
• சந்திர சேகரப்பிள்ளையார் கோயில்
• மேற்குதெரு வைரவர் கோயில்
• மேற்குதெரு பிள்ளையார் கோயில்
• ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தாணம்
• கச்சேரி நல்லூர் வைரவர் கோயில்
• பண்ணான்குளம் நாச்சியம்மன் கோயில்
• மூத்தவிநாயகர் ஆலயம்
• சென் ஜேம்ஸ் தேவாலயம்
• காந்திநிலைய வைரவர் கோயில்
• ஸ்ரீ கலைமகள் வைரவர் கோயில்
• மலரமகள் வைரவர் கோயில்
• நடுத்தெரு வைரவர் கோயில்
• அரியாலை ஞான வைரவர் கோயில்
• அரியாலை சனசமுக வைரவர் கோயில்

சன சமூகநிலையங்கள்
முக்கியமாக மக்களை சமூகப்படுத்தும் வேலையை செய்து வருகின்றன. விளையாட்டு, கலை, சிறுவர் உள உடல் வளர்ச்சி செயற்பாடு, கல்விச் செயற்பாடு, என பாரிய சமூக வளர்ச்சி செயற்திட்டத்தில் சன சமூகநிலையங்கள் அரியாலையில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இவற்றில் சில சனசமூக நிலையங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து தமது சேவைகளைச் செய்து வருவது அரியாலையின் மிகப்பெரும் பெருமையாகும்.
• அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
• அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம்
• அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
• அரியாலை கலைமகள் சனசமூக நிலையம்
• அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம்
• அரியாலை மேற்கு சனசமூக நிலையம்
• கனகரத்தினம் மகா வித்தியாலயம்
• ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
• துரையப்பா வித்தியாலயம்
• கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் (செட்டிதெரு)
• விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
• கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை

பிரபலமான கல்விமான்கள்
• பேராசிரியர் மோகனதாஸ் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
• மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
• சத்திரசிகிச்சை நிபுணர் – டாக்டர் ம. கணேசரட்ணம்.

பிரபலமான அரசியல் வாதிகள்
• முன்னாள் அமைச்சர் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர்  சி. சிற்றம்பலம்
• முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
• முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா

ஆக்கம்
வட்டக்கச்சி
வினோத்

ஊசாத்துனை
இணையம்
விக்கிபிடியாஅரியாலை சரஸ்வதி நூற்றாண்டு விழா நூல்

மணியம் தோட்டம்

யாழ்ப்பாணத்தில் அரியாலையிலுள்ள ஒரு கடல் சார்ந்த பிரதேசமே மணியம் தோட்டம் கிராமம். 1995 இடப்பெயர்வின் பின் 2010 ஆண்டு வரை 15 ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

பல இடப்பெயர்வுகள், அழிவுகள், இழப்புக்களிற்குப் பின் இந்தக்கிராமம் 2010 ல் மீள் எழுச்சி பெற ஆரம்பித்தது. மீன்பிடி, சிறு கைத்தொழில், சுயதொழிலிலேயே இவ்வூர் மக்கள் தங்கள் பொருளாதாரமாக கொண்டுள்ளார்கள்.

அதில் ஓர் மீள் எழுச்சி அங்கமே “மணியம் தோட்டம் தும்புத் தொழிற்சாலை”

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments