×

ஊர் நோக்கி – சாவகச்சேரி

வட மாகாணத்தில் யாழ்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒரு பிரதேசமாகும். இதன் எல்லைகள் வடக்கே தொண்டமண்ணாறு கடல்நீரேரியும்  கைதடி கொடிகாமம் நாவற்குழி போன்ற யாழ்பாணத்தில் மிகவும் பழமை மிக்க கிராமங்களை தன்னைச் சுற்றி கொண்ட ஒரு பிரதேசம் சாவகச்சேரி.

சாவாக + சேரி என்னும் பொருளில் பார்த்தால் இது ஒரு ஜவானீஸ் குடியேற்றம் என்று பொருள் படும். தென் கிழக்காசியப் படையெடுப்புக்களால் இங்கு இந்த பெயர் வரக்காரணமாக இருக்கலாம்.  அல்லது தொடர்புடைய படையெடுப்பாளர்களின் செயற்பாடு இங்கு நடந்திருக்க வாய்புள்ளதாக நம்பப்படுகின்றது.

யாழ்பாண இராசதாணியை  கைப்பற்றும் நோக்குடன் கிபி 1450 ம் ஆண்டு 6ம் பராக்கிரமபாகு படையெடுத்து வரும்போது சிங்களப் படைகளுக்கும் தமிழ்படைக்கும்  இடையில் முதலாவது யுத்தம் சாவகச்சேரியில் நடந்துள்ளது. பரராசசேகரனை சோழ மன்னன் சிறைப்பிடித்த போது அவரை மீட்ட பரமநீருபசிங்கம் என்ற வீரனுக்கு ஏழு ஊர்கள் பரிசளிக்கப்பட்டது. அதில் சாவகச்சேரியும் ஒன்று.

சோழர்கள், ஜவானீஸ் மற்றும் போர்த்துகேய, ஒல்லாந்த, ஆங்கிலேயே, இலங்கை இராணுவப் படையெடுப்பு என பல படையெடுப்புக்கள் போர்களைக் கடந்து இன்றும் தனக்குரிய தமிழ் அடையாளத்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது சாவகச்சேரி.

பற்றைக்காடுகள் தென்னந்தோப்புகள் வயல் நிலங்கள், மரக்கறிவகைகள், தானியங்கள், பழ மரங்கள் குறிப்பாக பலா, மா, வாழை என்னும் முக்கனிகளை விளைவிப்பதோடு மிக சுவையான பழங்களை விளைவிக்கும் மண் சாவகச்சேரி செமண். பரப்பும் நிலத்தடி  நீரையும் மழைநீரையும் நம்பி விவசாயம் செய்யும் விவசாய முறையே காணப்படுகிறது. பல சிறு குளங்கள் உள்ளபோதும் நீர்பாசன திட்டங்கள் ஏதும் இன்னும் செய்யப்படவில்லை. இன்று சாவகச்சேரி சிறப்புப் பெற்ற ஒரு வளர்ந்து வரும் பொருளாதார நகரமாக மாறி வருகிறது. ஆனால் ஊர் சார் உற்பத்திகள் பின் தங்கியும் வியாபார வீச்சு குறைவாகவும் உள்ளதால் அதை நம்பியுள்ள மக்கள் வருமானம் பெறுவதில் பாரிய நெருக்கடியை சந்தத்து வருகின்றனர். நாட்டின் பொருளாதர நிலையும் விலைவாசி ஏற்றமும் இன்னும் பல நெருக்கடியை ஏற்படுத்துகின்றது.

1995ம் ஆண்டு இலங்கை இராணுவம் சுரியகதிர் நடவடிக்கை மூலம் படையெடுத்து சவகச்சேரியை கைப்பற்றினார்கள். பின்னர் 2000ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் சவச்சேரியை கைப்பற்றி சில தினங்களின் பின்னர் இடம்பெற்ற இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை காலத்தில் பின்வாங்கினார்கள்.

• நுணாவில் கிழக்கு ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம்
• கல்வயல் பெருங்குளம் வீரகத்தி விநாயகர் கோயில்
• சாவகச்சேரி சிவன் கோயில்
• மீசாலை சோலை அம்மன் கோயில்
• சாவகச்சேரி இந்துக் கல்லூரி
• சாவகச்சேரி மகளிர் கல்லூரி
• சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி

வட்டக்கச்சி
வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments