×

ஊர் நோக்கி – தட்டுவன்கொட்டி

யுத்தகாலத்தில் அடிக்கடி ஊடகங்களில் பேசப்பட்ட கிராமம் தட்டுவன்கொட்டி. யுத்தகாலத்தில் இரணுவ கேந்திர முக்கியத்துவம்பெற்ற ஆனையிறவு மற்றும் சுண்டிக்குளம் சாலை ஆகியபிரதேசங்களுக்கு இடையே காணப்பட்டதால் அதிகம் ஊடகங்களில் பேசப்பட்ட கிராமமாகும். யாழ்ப்பாணம்.கண்டி வீதியில் இப் பழமை பொருந்திய கிராமம் அமைந்துள்ளது. ஆனையிறவுவாடிவீட்டுக்கு ஊடாக சென்று தட்டுவன்கொட்டி ஊடாக புளியம்போக்கனை ஊடாக சென்று தற்போது உள்ள இராமநாதபுரம் கிராமத்தின் ஊடாக இரணைமடு குளத்;தின் பின்பகுதி வரைசெல்லும் பழைய கண்டிவீதியும் குளத்தின் தேவைக்காக அமைக்கப்பட்ட புகைரதப் பாதையும் இந்த தட்டுவன்கொட்டி கிராமத்தின் ஊடாகச் செல்கிறது. தற்போது இது எ9 சாலைதொடக்கப்பட்ட பின்னர் முற்றாக இல்லாது போக பெயரளவில் தற்போது காணப்படுகிறது.

தட்டுவன்கொட்டிக் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேற்கே குஞ்சுப்பரந்தனும் கிழக்கே புளியம்பொக்கனையும் எல்லைகளாகக்கொண்ட பழம்பெரும் தமிழ் கிராமமாகும்.

தட்டுவன்கொட்டி கிராமத்தின் வடக்கு எல்லையாக கடலும் மற்றைய பாகங்கள் வயல்நிலம் செழித்த மருத நிலப்பரப்பால் சுழப்பட்ட கிராமம்.

இங்கே உள்ள மக்கள் பிரதான தொழிலாகவிவசாயத்தையும் உணவுத் தேவைக்காக கடலையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஊரியான் நாவற்கொட்டி என்பன அயற்கிராமங்களாக இருக்கிறது.

தட்டுவன்கொட்டி கண்டி யாழ் வீதியில் ஆனையிறவு கடல் பகுதிக்கும் தற்போது ஆனையிறவு புகைரத நிலையம் அமைந்துள்ள இடத்துக்கும் இடைப்பட்ட மேட்டு நிலப்பகுதியாக இருக்கும்இடத்தில் கரைச்சி கிராமச் சங்கம்,கிராமக்கோடும் ஒரு பொதுச் சந்தையும் ஒரு புகைரத நிலையமும்இருந்தது. தற்போது எல்லாம் அழிவடைந்து அந்தக் கிராமத்தில் மக்கள் நடமாட்டமேகுறைந்து காணப்படும் கிராமமாக

மாறியுள்ளது.

தட்டுவன்கொட்டியில் இருந்த கரைச்சி பொதுச்சந்தையானது முருங்கைக்கல்லினால் எட்டு பாரிய தூண்கள் அமைக்கப்பட்டு ஒரே கூரையில் அமைக்கப்பட்ட பாரிய சற்சதுர கட்டடமாகும். அப்படி ஒரு பாரிய கட்டடம் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்காலத்தில் எங்கும் இருக்கவில்லை. தட்டுவன் கொட்டியை மையமாகக் கொண்டே கரைச்சிப் பகுதி இருந்தது. ஆனையிறவுபுகைரத நிலையம் தொடக்கம் ஆனையிறவு கடற்கரைவரை உலகயுத்தம் நடைபெற்ற காலத்தில் கட்டப்பட்ட கற்களிலான பதுங்கு குழிகள் அண்மைக்காலம் வரை இருந்தன.

தற்போது எந்த வித தடையங்களும் இல்லாது யாருமற்ற நிலப்பரப்பாக அங்கங்கே சில குடியிருப்பும் ஒரு பாடசாலை ஒரு தபால் நிலையம் என்று அழிவடைந்து வரும் கிராமமாகவும்அடிப்படை வசதியற்ற ஒரு கிராமமாக இன்று கானப்படுகிறது அன்றைய கரைச்சியின் தலைநகரம்.

புளியம்பொக்கனை ஆலயத்தின் பண்டம் எடுக்கும் நிகழ்வு மீசாலையில் இருந்து ஆனையிறவு ஊடக வந்து தட்டுவன்கொட்டி கிராமத்தின் ஊடாகமாட்டு வண்டியில் செல்லும். இது ஒருபாரம்பெரிய வழக்கமாக இருந்து வந்தது இந்தக் கிராமத்தில்.

வீதி அபிவிருத்தி மற்றும் புகைரத பாதை அபிவிருத்தி காரணமாக கடல்நீரேரி பிரிக்ககப்பட இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பின்னடைவை சந்தித்தது. அதனால் மக்கள் இங்கிருந்துபோரின் போதும் போர் முடிந்தபின்னும் இடம்பெயரத் தொடங்கி விட்டனர். தற்போது ஒரு சில குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் தலைநகராக விளங்கிய இந்தக் கிராமம் இன்று தடையமற்று போய்க்கொண்டு இருப்பது வேதனை.

நன்றி

வட்டக்கச்சி

வினோத்

உசாத்துணை கரை எழில் 2014

இணையம்

யாழ் நூலகம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments