
அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார் யாழ்ப்பாணத்தின் சென். பற்றிக் கல்லூரியின் முன்னாள் அதிபராக கடமையாற்றியிருந்தார். இறுதியுத்தத்தின் போது வன்னியில் 6 பாதிரியார்களுடன் இணைந்து புதுமாத்தளன் பகுதியில் இருந்த மக்களுக்கு பணியாற்றியதோடு, தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் இறுதிக் கட்டத்தில் சரணடைவதற்கு உதவும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவர் வன்னியில் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவதற்கு முன்னர் வடக்கு -கிழக்கு கல்வி மேம்பாட்டுக் குழுவின் தலைவராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் காணாமல் போன நேரத்தில் அவருக்கு 70 வயது என்று தெரிவிக்கப்பட்டது.