ஈழத்தின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமம் தருமபுரம். எ35 நெடுஞ்சாலையில் நெத்தலி ஆற்றுக்கு மேற்காக பரந்தனில் இருந்து 15 கிலோ மீற்றர் தூரத்தில் ஏறக்குறைய 618 ஏக்கரில் 618 குடும்பங்களை கெண்டு, 1958 ம் ஆண்டு உதயமான கிராமம் தருமபுரம்.
எமது நாட்டில்1951 ம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்கள் எதிர்கொண்டஇனவெறி தாக்குதல்களில் அனுராதபுரம் மற்றும் இலங்கையின் பல்வேறு இடங்களில் இருந்துஇடம்பெயர்ந்து வந்த மக்களை 1958ம் ஆண்டு இப்பகுதியில் குடியமர்த்தி தருமபுரம் கிராமம் உருவாக்கப்பட்டது குறிப்பாக தமிழ் மக்கள் வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொடக்கம் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்தனர். எல்லாளன் ஆட்சியில் அனுராதபுரம் தலைநகராக இருந்தபோது அனுராதபுரம் எங்கும் தமிழர்களேவாழ்ந்து வந்தனர். இன்னும் அதற்கான அடையாளமாக அங்குகாணப்படும் சைவ ஆலயங்கள், கிராமியத் தெய்வ வழிபாடுகள் சான்று கூறுகின்றது. ஆனால்அனுராதபுரத்தில் இருந்து இனமுரண்பாட்டில் துரத்தப்பட்ட மக்களில் அதிகமானவர்கள் தருமபுரத்தில் குடியமர்ந்துள்ளார்கள். அதற்கு சான்று அங்குள்ள சிலமுதியவர்களின் பிறப்பு பதிவு சான்றாக உள்ளது.
தருமபுரத்தில் கலைகளுக்கு பஞ்சமிருக்காது. பல படைப்பாளிகளையும் பல கலைஞர்களையும் பல ஆற்றல் மிக்க மக்களையும் தேசத்துக்காக பல போரளிகள்மவீரர்களை கொடுத்த தமிழ்பற்றும், தேச நலனும் கொண்ட கிராமமாகும். சிறு விவசாயம், விவசாய கூலிகள் கைத்தொழில் உற்பத்திகள், வயல்நிலங்கள் என எங்கும்உழைக்கும் கரங்களை கொண்ட மக்களை தருமபுரத்தில் காணமுடியும்.
தருமபுரம் கல்வியில் சிறப்பு மிக்க ஒளிக்கீற்றை பரவத் தொடங்கியுள்ளது. இரண்டு பாடசாலைகளும், கல்வி மற்றும் சமூகக் கட்மைப்பில் பாரிய சேவையாற்றிவருகிறது. சைவ மற்றும் கிறிஸ்தவ சமய வழிபாடுகளை ஆன்மீக வழிகாட்டுதலாக ஏற்று வழிபடும் மக்கள் தருமபுரத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
1953ம் ஆண்டு அனுராதபுரத்தில் பிறந்து தருமபுரத்தில் வாழ்ந்து வருகிறார் செல்வி நடனவதி முருகேசு, இசைத்துறை கலைஞர்.
1960ம் ஆண்டு பிறந்து தருமபுரத்தில் வாழ்ந்துவரும் நாடகத்துறை கலைஞர் திரு மரியாம்பிள்ளை றோமியல்.
1969ல் தருமபுரத்ததில் பிறந்த வாழ்ந்துவரும் திரு சேவுகன் ஆறுமுகம், இலக்கியத்துறை கலைஞர்.
1988ம் தரமபுரத்தில் பிறந்த திரு ஆமோஸ் பேனாட் நடிப்புத்துறை கலைஞர்.
இங்கு காணப்படும் பாடசாலைகள்:
கிளி தருமபுரம் இல 01 அரசினல் தமிழ் கலவன் பாடசாலை
கிளி தருமபுரம் மகா வித்தியாலயம்
உசாத்துணை
வட்டக்கச்சி
வினோத்