வவுனியா நகரிலிருந்து கிழக்கே மூன்று கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம் அமைந்துள்ளது. வயல்களாற் சூழப்பட்ட இக்கிராமத்தில் அதிகமானவர்கள் விவசாயிகளாவர்.
10.08.1985 அன்று காலை 7.00 மணியளவில் வழமைபோல் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சந்தைக்குப் பொருட்கள் வாங்க மற்றும் விற்கச் செல்வோர், வைத்தியசாலைக்குச் செல்வோர், பாடசாலை செல்வோர் எனப் பூந்தோட்டம் வீதியால் அதிகளவான மக்கள் பயணம் செய்தனர். அந்த நேரம் அவ்வீதியால் வாகனத்தில் வந்த காவற்றுறையினர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் பத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள்.
10.08.1985 அன்று வவுனியா பூந்தோட்டச்சந்தி படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
01. வெள்ளையன் தேவதாஸ் (வயது 20 – லொறி சுத்தம் செய்ப்பவர்)
02. பொன்னம்பலம் வில்வராஜ் (வயது 22 – வியாபாரம்)
03. கதிரேசு சுந்திரசேகரம் (வயது 25 – மருந்துத் தொழிலாளர்)
04. சிங்காரம் நாகலிங்கம் (வயது 33 – தொழிலாளி)
05. முடியாண்டி மூக்கன் (வயது 34 – தொழிலாளி)
06. வீரமாரெட்டியார் கோவிந்தராஜ் (வயது 38 – வியாபாரம்)
07. சின்னக்கருப்பன் கிட்ணசாமி (வயது 40 – தொழிலாளி)
08. துரைராஜா நடேசபிள்ளை (வயது 43 – உதவி முகாமையாளர்)
09. கறுப்பையா ராமராஜ் (வயது 48 – வியாபாரம்)
10. கோவிந்தசாமி சிங்காரவேலு (வயது 63 – கமம்)
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.
நன்றி – ‘ஓவியம்’ ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள்.