×

1979ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள்.

1970ஆம் ஆண்டு முன்னாள் சிறிலங்காப் பிரதமர் சிறிமாவோ அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி ரீதியான தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பொங்கி எழுந்து 1970ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இநத் ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள்.  இனரீதியான தரப்படுத்தல் முறையைக் கொண்டுவந்த சிறிமாவோ அரசிற்கு எதிராகவும், அந்த அரசில் கல்வி அமைச்சராகவிருந்த அல்ஹாஜ் பதியுதீன் முகமட் அவர்களிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். இநத் ஊர்வலமும் அக்காலகட்டத்தில் நிலவிய கொந்தளிப்பான அரசியற் சூழ்நிலையும், தமிழ் மாணவர் பேரவையினுடைய உருவாக்கத்திற்குக் காரணமாயிற்று. தியாகி சிவகுமாரன், சத்தியசீலன், வே.பிரபாகரன் போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் தீவிர முனைப்புடையவர்களாக இருந்தார்கள். தரப்படுத்தல் முறையைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு சிறிமாவோ அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு 1972.05.22 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு இருந்ததாகக் கூறப்பட்ட அற்பசொற்ப காப்பையும் முற்றாகப் பறித்தது

1972ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக வடகிழக்கில்  சிறிலங்கா அரசிற்கெதிரான செயற்பாடுகள் முனைப்படைந்தன. இவற்றினைத் தடுக்க விரும்பிய ஜே.ஆர் அரசு 1978 மே மாதம் விடுதலைப்புலிகள் மீது தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனாலும் போராட்டத்தை அவரால் அடக்கமுடியவில்லை. போராட்டச் செயல்கள் மேலும் தீவிரம் பெற்றன. இதனால் 1979.07.13 அன்று பயங்கரவாதச் தடைச்சட்டத்தைப் பிரகடனப்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது மருமகனான எஸ்.ஐ.திஸ்ஸ வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்குரிய படைத்தளபதியாக நியமித்து அந்த ஆண்டு டிசெம்பர் முப்பத்தோராம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய சகல வளங்களையும் பயன்படுத்தி தீவிரவாதத்தை குறிப்பாக யாழ். மாவட்டத்தில் முற்றாக ஒழித்துக்கட்டுமாறு உத்தரவிட்டார். அத்தோடு அவசரகாலச் சடட் மும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஜே.ஆர் ஜெயவர்த்தனாவால் வழங்கப்பட்ட இந்த உத்தரவு பற்றி அக்கால கட்டத்தில் மதவாச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த திரு.மைத்திரிபால சேனநாயகக் இது யூதர்களை ஒழித்துக்கட்டுமாறு சர்வாதிகாரியான அடொல்ப் கிட்லர் தனது படைத் தளபதியான அடொல்ப் ஈச்மெனுக்குக் கொடுத்த கட்டளைக்கு ஒப்பானதெனக் குறிப்பிட்டார். ஜே.ஆரால் அதிகாரமளிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்ட திஸ்ஸவீரதுங்க தலைமையிலான இராணுவத்தினர் மேற்கொண்ட அடாவடித்தனங்களால் பல தமிழ் இளைஞர்கள் சுடப்பட்டார்கள். பலர் காணாமற் போனார்கள். இவர்களில் சிலரின் பெயர்கள் பின்வருமாறு.

நவாலியைச் சேர்ந்த இன்பம் (இரத்தினம் விஸ்வயோதி) இவரது மைத்துனரான செல்வம் (செல்வரட்ணம்) இருவரும் 1979.07.12 அன்று யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்தைச் சேர்நத் காவற்றுறை அதிகாரி கருணாரடண் தலைமையிலான காவற்றுறையினரால் இரவில் நவாலியிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவற்றுறை நிலையத்திற்குப் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு மிகமோசமாகத் தாக்கப்பட்டார்கள். இறுதியில் அவர்களது வாய்க்குள் துப்பாக்கியைத் திணித்துச் சுட்டுக்கொன்று விட்டு, இறந்தவர்களது உடலை அல்லைப்பிட்டி வெளியில் வீசிவிட்டுச் சென்றார்கள். இக்காலகட்டத்தில் மேலும் பல இளைஞர்கள் காணாமற்போயினர். நல்லூரைச் சேர்ந்த பரமேஸ்வரன், இராஜேஸ்வரன் என்ற இரண்டு சகோதரர்கள் மேலும் நவாலியைச் சேர்ந்த பாலேந்திரா போன்றவர்களும் காணாமற்போயினர். சாவகச்சேரி காவற்றுறை நிலையத்தில் வைத்து இந்திரராசா என்ற இளைஞர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார். 1979 இப்படுகொலை பற்றிய விடயங்களை லண்டன் தமிழ் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கிருஸ்ணா வைகுந்தவாசன் அவர்கள் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாருடைய கவனத்திற்குக் கொண்டுவந்த போது அதைப்பற்றி அறிந்துகொண்ட முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் “I am horrified very much with the incident taking place in Jaffna” எனத் தெரிவித்தார். மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை பலத்த கண்டனத்தையும் தெரிவித்தது.

இப்படுகொலைகளைச் சர்வதேச மன்னிப்புச்சபை மிக வன்மையாகக் கண்டித்ததோடு, இவைபற்றி முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜே.ஆர்.அரசுக்கு அழுத்தம் கொடுத்து. மேலும் 1979 யூலை மாதம் தொடக்கம், அதே ஆண்டு டிசம்பர் மாதம் முப்பத்தோராம் திகதி வரை சிறிலங்கா இராணுவத்தாலும் ஏனைய பாதுகாப்புப் படைகளாலும் சிறிலங்காக் காவற்றுறையாலும் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் பற்றிய முழுமையான விபரங்கள் யாவும் அக்காலகட்டத்தில் வணபிதா போல்கஸ்பேர்ஸ் அவர்களைத் தலைவராகக் கொண்டியங்கிய “மேர்ஜ்” என்ற பொதுமக்கள் அமைப்பு “Emergency 79” என்ற நூலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments