×

அடையாள அட்டை – விடுதலைப்புலிகளின் நிரந்தரப்படை

அடையாள அட்டை:

அடையாள அட்டையின் முன்புறத்தில் உரியவரின் வரிப்புலிப் படத்தின் மேல் புலிகளின் முத்திரையுடன் அடையாள அட்டையின் பாவனைக் கால அளவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பின்புறத்தில் (கிடமட்டமாக) அப்புலிவீரனின் இயக்கப்பெயர், பிறந்த திகதி, உயரம், குருதி வகை, உறுப்பினர் கையொப்பம், இன்னொருவரின் ஒப்பந்தம் மற்றும் அடையாள அட்டை எண் என்பன அடங்கியிருக்கும்.

விடுதலைப்புலிகளின் நிரந்தரப்படை:

  • முன்பக்கம்:
  • ”மேற்கண்ட படத்தில் இருப்பவர் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப் கேணல் விநாயகம் ஆவார்”
  • பின்பக்கம்:
  • மேற்கண்ட படத்தில் இருப்பவர் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப் கேணல் விநாயகம் ஆவார்

விடுதலைப்புலிகளின் மக்கள்படை:

  • இவை உள்ளூர் (நடைமுறை அரசின் கட்டுப்பாட்டு ஆட்புலங்கள்) பாவனைக்கு மட்டுமே.

ஜெனீவா போர் நிறுத்த உடன்படிக்கைக் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் பகைப்புலத்தினுள் சென்று அரசியல் வேலைகளில் ஈடுபட சிங்கள அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு செல்வோர் முகமாலை வழியாக குடாநாட்டிற்கும் ஓமந்தை வழியாக பிற மாவட்டங்களுக்கும் செல்லும் போது இச் சிங்கள சோதனைச்சாவடிகளில் உள்ள பதிவுநிலையங்களில் பதிந்துவிட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதற்காக தங்கள் உறுப்பினர்களுக்கு புலிகள் இவ் அடையாள அட்டைகளை வழங்கினர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments