
இன்று இராஜராஜ சோழன் பிறந்தநாள் பெரும்பாட்டன் வயது ??.
வணங்குகிறேன் தாத்தா. ஈழத்தமிழருக்கு சோழர்கள் தந்தைவழியினரல்ல தாய் வழியினர். எனக்கு வாய்ச்சொல் வீரத்தில் சற்றேனும் நம்பிக்கை இல்லை. அறிவார்ந்த உலக ஓட்டத்தில் நாங்கள் இனம் சார்ந்து நிலைத்து நிற்கவேணடுமெனில் நாம் அறிவு எனும் ஆயுதம் கொண்டு போரிட வேண்டும். பொருளாதார யுத்தங்களில் நாம் நின்று நிலைத்து வெற்றிவாகை சூட வேண்டும்.
அதுவே நாம் நமது சோழதேசத்துக்கும் புலிக்கொடிக்கும் காட்டும் விசுவாசம். “சொல்லு தமிழ் என்ற வாளெடுக்கும் சோழம் மீண்டும் அறிவியற் போர் தொடுக்கும்” தஞ்சையில் உலகம் பிரம்மிக்க தமிழ்க்கோவில் தந்தவன் வாழ்க… அலைகடல் மோதி திரிசடை ஓடி கடல்களை வென்றவன் வாழ்க… திருமுறை தந்தவன் வாழ்க…. வாழ்க சோழம்… வாழ்க சோழம்…