மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் கீழ் வயல் நிலங்களை உள்ளடக்கி இக்கிராமம் அமைந்துள்ளது.
1990களின் ஆரம்பத்தில் உள்நாட்டு யுத்தம் மீண்டும் தீவிரமடைந்ததனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டானில் பாரிய இராணுவ முகாமினை சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்தார்கள். இதனால் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் தஞ்சமடைந்தார்கள். இவ்வாறு தஞச் மடைநத் மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளில் சென்று குடியமருமாறு இராணுவத்தினர் கூறியதனைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் வீடுகளில் குடியமர்ந்தார்கள். இராணுவத்தின் கூற்றை நம்பிய தத்தமது வீடுகளில் வசிக்க வந்த மக்களனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களில் எண்பத்தைந்து பேர் பெண்கள்.
இவர்களை முகாமிலிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாலியல் வல்லுறவிற்குற்படுத்திபின், அவர்களின் மார்பகங்கள், கை, கால் போன்றவற்றினை வெட்டி மிக மோசமான முறையிற் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். கைது செய்யப்பட்ட ஐந்து குழந்தைகள் உட்பட அறுபத்தெட்டுச் சிறுவர்களையும் மோசமான சித்திரவதைகளின் பின் சுட்டுக்கொலை செய்ததுடன், பதினேழு பேரளவிலான ஆண்களின் அங்கங்களை வெட்டிச் சித்திரவதை செய்து படுகொலை செய்தார்கள். மொத்தமாக இருநூற்றைந்து பேர் இச்சத்துருக்கொண்டான் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தொரு வயதான கந்தசாமி கிருஸ்ணகுமார் மட்டுமே காயங்களுடன் தப்பி வந்து சம்பவத்தினை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் அமைப்பு சம்பவத்தினை வெளிப்படுத்தியது. ஆனால் இராணுவத்தினர் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனத் தெரிவித்ததுடன், மக்கள் அமைப்பின் தலைவரான திரு. அருணகிரிநாதன் அவர்களை மிரட்டி இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை என எழுத்து மூலம் பொய் அறிக்கையினைத் தருமாறு வற்புறுத்தினர். இதனையடுத்து மக்கள் அமைப்பின் தலைவர் தனது பதவியினைத் துறந்தார்.
09.09.1990 அன்று சத்துருக்கொண்டான் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:
குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.