கனடாவில் ஒன்ராரியோவில் பாடசாலை கற்கை திட்டத்தில் மே 11-17 வரையான நாட்களை ஈழத்தில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையை அனைத்து ஒன்ராரியோ மாணவர்களும் கற்பதற்கான கற்கை நெறி திட்டத்தில் கொண்டுவருவதற்கான சட்ட வரைபு Bill104 ஏற்கனவே இருமுறை ஏகமனதாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் இரு வாசிப்புகளிலும் ஒன்ராரியோ சட்ட மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் இன்று மூன்றாவது வாசிப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் “எங்கள் வீட்டுப் பிள்ளை” என கனடா வாழ் தமிழ் மக்களால் அன்போடு போற்றப்படும் விஜய் தணிகாசலம் அவர்களால் கொண்டு வரப்பட்டு இன்று சட்டமாகப்பட்டுள்ளது.
இதன் பின் நின்று உழைத்த சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவை, மற்றும் இதர தொண்டர்கள் அனைவரிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகெங்கிலும் கிட்டாத ஒரு வெற்றி தமிழர்க்கு கனடிய மண்ணில் ஒரு அங்கீகாரமாக தமிழின விடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக கிட்டியதில் கனடியத் தமிழராக கனடிய மண்ணிற்கு நன்றி கூறுகிறோம்!
மேலும் ஆதாரங்களுக்கு கீழே அழுத்தவும்.