×

அபிர்சனா தயாளகுரு

ஈழத் தமிழர்களின் வலியை ஓவியமாய் வரைந்து சுவிஸ் தமிழ் சிறுமி.
ஈழத்தில் யாழ். இணுவிலை தாயகமாக்கொண்ட பெற்றோருக்கு சுவிற்சர்லாந்தில் அறோ மாநிலத்தில் புறுக்நகரில் பிறந்தவர் செல்வி தயாளகுரு அபிர்சனா ஆவார்.

சுவிற்சர்லாந்து நுண்கைலக் கல்லூரியில் ஓவியத்துறையில் பட்டயக் கல்வியை மேற்கொள்ளும் அவர் உயர்கட்டிடக் கட்டுமான வரைவாயளராகவும் மேற்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் ஈழத்தில் 2009ல் நடைபெற்ற இன அழிப்பு, பெரும் போர்க் குற்றத்தையும் அதனைத் தொடர்ந்து இன்றுரை தொடரும் சிங்களபௌத்த அடக்குமுறையினையும் கருத்துதோவியமாக வரைந்து அளித்துள்ளார்.

இவ் ஓவியம் இன அழிப்பிற்கு ஜெனீவாவில் நீதிகேட்டு பன்னாட்டு சமூகத்திடம் தமிழ் மக்கள் நடாத்தும் அறப்போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
19 வயது நிரம்பிய செல்வி அபிர்சனா சுவிற்சர்லாந்தின் முன்னணி வங்கியான றைப்பைசன் சுவிற்சர்லாந்து நாடுதழுவி இசையால் அசையும் உலகு எனும் பெயரில் நடாத்திய போட்டியில் முதலாவதாக வெற்றியீட்டி அவுத்திராய நாட்டிற்கு அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டி பற்றிய மேலதிக தகவல்கள் :
சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49 வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஒவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1 ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார் .
குறித்த நிகழ்வு கடந்த 19 ம் திகதி அவுத்திராய நாட்டின் தலைநகரான வியன்னாவில் நடைபெற்றுள்ளது . இசை என்னை அசைக்கிறது எனும் தலைப்பில் குறித்த சிறுமி வரைந்த ஓவியம் பல ஆயிரம் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வெல்லப்பட்டுள்ளது .

இசையுடன் தொடர்புபடுத்தி , உங்கள் சொந்த அனுபவத்தினை கலையாகப் படையுங்கள் , இசை எப்படி உங்களை ஆட்படுத்துகிறது , இசை ஆக்கத்திறனை எப்படி வளர்க்கிறது , அதனை நீங்கள் உங்கள் கலையால் எப்படி வெளிப்படுத்துவீர்கள் என்பன போட்டியில் கேட்கப்பட்டிருந்த தலைப்புகளுக்கு சிறுமி ஆக்கத்தினை வரைந்துள்ளார் . இசை கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறது , செய்திகளை கடத்துகிறது , தூது செல்கிறது , பார்வை மாற்றத்தை அளிக்கிறது , சிந்திக்க வைக்கிறது எனும் பொருளில் பிறர் உதவி இல்லாமல் இவ் ஒவியம் தன்னால் நிறந்தீட்டி படைக்கப்பட்டதாக செல்வி அபிர்சனா தெரிவித்துள்ளார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments