×

ஊர் நோக்கி – அழகாபுரி

ஈழத்தின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேசத்தில் வட்டக்கச்சி பேரூர் பகுதியில் இராமநாதபுரம் என்னும் அழகிய ஊரின் ஒரு கிராமமே அழகாபுரி. பழைய கண்டி விதியின் கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகும்.

புதுக்காடு என்னும் கிராமத்தின் அருகில் அமைந்திருக்கும் அழகாபுரி, சுற்றிலும் காடுகள் சுழ காணப்படும் ஒரு கிராமமாகும். யாழ்பாணத்தின் தீவகப்பகுதி இடம் பெயர்வுகள், யாழ்ப்பாண இடம் பெயர்வு இப்பகுதியில் அதிக மக்கள் குடியெறக் காரணமாக இருந்தது.  தனது ஒரு பக்கத்தில் ஈழத்தின் புராதண பண்பாடுகளைக் கொண்ட அம்பகாமம் என்னும் பழமை மிக்க ஊரை அருகே கொண்டிருந்தாலும் அவ் ஊருக்கான தரைவெளித் தொடர்பு, இக்கிராமத்தில் இருந்து செல்ல இராணுவம் மற்றும் அரசால் இன்றுவரை தடுக்கப்பட்டுள்ளது.

சிறு தோட்டங்கள், காட்டு வளத்தின் பயன்கள், கூலி வேலைகள் மூலம் இவ் ஊர்மக்கள் தமக்கான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகம் வறுமையின் பாதிப்பு இக்கிராமத்தில் உள்ளது. காரணம் வரட்சி ஏற்படக் கூடிய இடம், மற்றும் நீர்பாசன வசதிகள் குறைவு, தரைவழி பாதைகள் தடை, காட்டு வளங்களை பயன்படுத்த சட்டத்தடை என்பன இப்பிரதேசத்தில் மக்கள் வருமானம் ஈட்ட முடியாத பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

அழகாபுரி என பெயர் வரக்காரணம் இங்கு இருந்த மூத்த கிராமத் தலைவர் இக்கிராமத்துக்கு இப்பெயரை வைத்ததாக கூறுகின்றனர் மக்கள். மற்றும் சில புராதணச் சின்னங்கள் இப்பிரதேச வனப்பகுதியில் காணப்படுகிறது. இருந்தும் அவைபற்றிய ஆய்வுகள் தமிழர் பிரதேசம் என்பதால் அரசு அதை கண்டுகொள்வதில்லை.

போரின் போது அதிக விமானத் தாக்குதல்கள், குண்டுவீச்சுத் தக்குதல்களை இப்பிரதேசம் சந்தித்துள்ளது. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களையும் போராளிகளையும் கொடுத்து தியாகத்திலும்  உயர்ந்து நிற்கிறது அழாகாபுரி.

இங்கே ஒரு ஆரம்ப பாடசாலை காணப்படுகிறது. அது அழகாபுரி ஆரம்ப வித்தியாலயம். மற்றும் கிராமியத் தெய்வ வழிபாடுகளே அதிகம் காணப்படுகிறது இங்கே. அழகாபுரி இன்றும் வறுமையோடு இருந்தாலும் செழித்த தமிழோடும் தமிழர் விடுதலை தியாகத்தோடும் நிமிர்ந்து நிற்கிறது.
– வட்டக்கச்சி
– வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments