
அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம்
மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிய நிலையில் நாம் எமது பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்தியிருந்தோம். இந்நிலையில் தற்போது சில நாட்களாக ஆலங்குளம் துயிலுமில்லம் இயந்திரங்களின் உதவியுடன் ஆழமாக அகழப்பட்டு அருகிலிருக்கும் இராணுவ முகாமைச்சுற்றி மண்ணணை கட்டப்பட்டு வருகின்றது.
எமது பிள்ளைகளைப் புதைத்த இடத்தில் இவ்வாறு மண்ணை அகழ்ந்து இன்னொரு இடத்தில் அணை கட்டுவது எமது மனதைப் புண்படுத்துகின்றது. இராணுவத்தினரின் இவ்வாறான செயலை உடனடியாகத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.