×

பழங்கால தமிழ் உணவுகள்

உளுந்து களி ஃ குரக்கன் களி

முந்தைய நாட்களில் கிராமங்களில் பருவமடையும் போது சிறுமிகளுக்கு வழங்கப்பட்ட மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.  இது பாரம்பரியமாக வெல்லம் மற்றும் நல்லெண்ணையுடன் உண்ணப்படுகிறது.  இந்த உணவு புரதங்களின் வீடாக கருதப்படுகிறது.  இந்த உணவு இலங்கையிலும் மிகவும் பிரபலமாக இருந்தது.

இந்த உணவு காலப்போக்கில் படிப்படியாக மரணித்துக்கொண்டு வருகிறது.

உளுத்தம்பருப்பு நார்ச்சத்து நிறைந்ததாக அறியப்படுகிறது, எனவே செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.  எலும்புகள் மற்றும் தசைகளுக்கு வலிமை அளிக்க கர்ப்ப காலத்திலும் பருவ வயதை அடைந்த சிறுமிகளுக்கும் இந்த களி வழங்கப்பட்டுள்ளது.  இந்த உணவு ஜீரணிக்க எளிதானது.

தேவையான பொருட்கள்:

உளுந்து – 1ஃ2 கப்

அரிசி – 1 மேஜைக்கரண்டி

வெல்லம் அல்லது கருப்பட்டி, பொடித்து – 1ஃ2 கப் 10 1 மேஜைக்கரண்டி

நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி

உளுந்து களி  செய்முறை:

  1. உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  2. ஆறியபின் மிக்சியில் நைசான மாவாக அரைக்கவும்.

3.ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெள்ளம்ஃ கருப்பட்டி சேர்த்து, அரை கப் 10 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  1. அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு விஸ்க் கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.
  2. மேலும் 1ஃ4 கப்10 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக்கவும்.
  3. கை விடாமல் கலந்துகொண்டு இருப்பது அவசியம். இல்லையென்றால் அடி பிடிக்கும்.
  4. கிண்டும் பொழுது, ஒரு சமயத்தில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
  5. களி வெந்து, ஓரத்தில் ஒட்டாமல் வந்தவுடன், கையை தண்ணீரில் நினைத்து, களியை தொட்டுப்பார்த்தால் ஒட்டக்கூடாது. இப்பொழுது அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்:

  • உளுந்தும், அரிசியும் வருக்கும் பொழுது, மிதமான தீயில் வறுத்தால் தான், கருகாமல், உள் வரை வறுபடும் .
  • எண்ணெய், ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை சேர்த்துக்கொள்ளவும்.

உருண்டைகளாக உருட்டியோ அல்லது அப்படியேவும் கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments