
அறிவு (பிறப்பு: 29/10/1991) என பொதுவாக அறியப்படும் அறிவரசு கலைநேசன் என்பவர் ஒரு இந்திய ராப், பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் பொதுவாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாஸ்டர் (2021) படத்திற்காக இவர் எழுதிய “வாத்தி ரெய்டு” பாடலுக்காகவும், தீயுன் இணைந்து இவர் பாடிய ” எஞ்சாய் எஞ்சாமி ” என்ற ஒற்றை பாடலுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.
தொழில்
கல்லூரியில் எம்பிஏ படிக்கும் போது, அறிவு பா. ரஞ்சித்தை சந்தித்தார். அப்போது அவர் காலாவை (2018) இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் அறிவு ரஞ்சித்தின் இசைக்குழுவான தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வில் இணைந்தார். பின்னர் இவர் தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்களை இயற்றுவதோடு, பல சுயாதீன பாடல்களையும் உருவாக்கியுள்ளார். அறிவு இசை தயாரிப்பாளர் ஆஃப்ரோவுடன் இணைந்து தனது “தெருக்குரல்” பாடல் தொகுப்புக்காக பல பாடல்களை எழுதினார், இது வெளியிடப்பட்டு பிரபலமானது.
ஆரம்ப கால வாழ்க்கை
அறிவு சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணம் ஊரில் வளர்ந்தவர். இவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தொலைக்காட்சி, வானொலி போன்றவை இல்லாமல் வளர்க்கபட்டார். இதனால் இவர் நாட்டுப்புற பாடல்களின் தாக்கத்துக்கு உட்பட்டார். இவர் தனது உயர்நிலைப் பள்ளி நாட்களில் சாதி, வறுமை பற்றி கவிதைகள் எழுதத் தொடங்கினார், மேலும் தனது கல்லூரி காலத்தில் அரசியல் உணர்வு பெற்றார்.
Source: Wikipedia