
அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர். சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில் இருந்து விலகி மாலைதீவுக் கப்பல் ஒன்றில் இரண்டாம் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். ஆறு ஆண்டுகளில் கப்பல் கப்டனாக பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகள் மாலைதீவுக் கப்பலில் பணியாற்றினார். எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுமுறையில் நாடு திரும்பிய போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு முகாமில் ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டார். சிறை வாழ்க்கை அவரை தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்த்தது. ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார்.
2001 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரநேரு அம்பாறை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 26,282 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் பொலன்னறுவை மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானதில் லெப் கேணல் கௌசல்யன், மற்றும் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகிய நான்கு விடுதலைப் புலிகள், ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மாமனிதர் என்று மதிப்பளிக்கப்பட்ட மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு
தலைமை செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
09.02.2005
தமிழ் மக்களின் விடிவையும் தமிழீழ மன்னனின் விடுதலையையும் தனது வாழ்வின் அதியுன்னத இலட்சியமாக வரித்து அந்த உயரிய இலட்சியத்திற்காக அயராது உன்னத மனிதரை தமிழர் தேசம் இன்று இழந்துவிட்டது தமிழ் மக்களது உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று மிருகத்தனமான தாக்குதலுக்கு ஒரு தமிழினப் பற்றாளர் பலியாகிவிட்டார்.
திரு அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் தன்னலம் அகன்ற மனிதநேயமிக்க ஒருபொது நல வாதி . தமிழீழ மண் தந்த தலைசிறந்த ஒரு மனிதஉரிமை ஆவலர். புரட்சிகரமான
அரசியல்வாதி. அனைவரது உள்ளங்களையும் கவர்ந்துகொண்ட ஒரு உயரிய பணியாளர். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு ஒரு ஈடுசெய்யமுடியத பேரிழப்பு அம்பாறை மண்ணோடும் அந்த மண்ணின் மக்களோடும் ஒன்றியதாகவே அவரது வாழ்விருந்தது சிங்களப் படைகளில் தமிழின அழிப்புப் போர் உச்சம்பெற்றிருந்த நாட்களிலும் போர்ஒய்வு நிலவுகின்ற இன்றைய நாட்களிலும் அந்த மணோடும் அந்த மக்களோடும் இணைந்துநின்று அனைத்துக்கும் முகம்கொடுத்தார். சிங்களப் படைகள் அம்பாறை மண்ணில் புரிந்த அழிவுகளையும் அட்டுழியங்களையும் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்.
சிங்களைப் படைகளின் இடைவிடாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஆபத்துக்கள் குழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான துணிைச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார் வடக்குகிழக்கு மனிதஉரிமைகள் நிறுவளர்களில் ஒருவராக இருந்து தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஓயாது உழைத்தார்.
தமிழ் மக்களது போராட்ட நியாயங்களையும் நியாயப்பாடுகளையும் தெட்டதெளிவாக உலக அரங்குகளில் ஏடுத்துக்கூறினார். இவரது அரும்பணி என்றும் பாராட்டற்குரியது. திரு. அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் இணைப்பற்றிற்கும், விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவரது நற்பணியை கெளரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.
உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை எமது தேசத்தின் ஆன்மவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.
“புலிகளின் தாகம் தமிழ்த் நாயகம்”
(வே. பிரபாகரன்)
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.