×

பெயர் : பாலசேகரன் கந்தையா ஊர் : கொக்குத்தோடுவாய் ,முல்லைத்தீவு பால்ராஜ் என்ற பெயர்

பெயர் : பாலசேகரன் கந்தையா

ஊர் : கொக்குத்தோடுவாய், முல்லைத்தீவு பால்ராஜ் என்ற பெயர் ஒன்றே இலங்கை இராணுவத்தைக் கதிகலங்க வைத்தது. “என்னையும் விடச் சிறந்த போராளி “ எனத் தமிழீழத் தேசியத் தலைவராலேயே பாராட்டப் பெற்ற சமர்க்கள நாயகன். விடுதலைப் புலிகளின் முதல் மரபுவழிப் படையணியான சார்லஸ் அன்டனி படையணியின் முதல் கட்டளைத்தளபதி. தாக்குதல்களை நுட்பமாக வடிவமைப்பதிலும் முன்னடத்திச் சென்று வெற்றிபெற வைப்பதிலும் தலைசிறந்தவர்.

இந்திய இராணுவத்துடன் நடந்த போரில் பால்ராஜின் முழுத்திறனும் முதல்முறையாக வெளிப்பட்டது . பின்னர் 2000 ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளம் மீதான துணிச்சல் மிக்கத் தாக்குதல் அவருக்கு மக்களிடம் பெரும் புகழை ஈட்டித் தந்தது . தனது வீரத்தாலும் போர் நுட்பத் திறத்தாலும் மட்டுமல்ல, போராளிகளிடம் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நேசத்தினாலும், அவர்களது நலனில் அவர் கொண்ட உண்மையான ஈடுபட்டினாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். நேசிக்கப்பட்டார். உடல்நலக் குறைவால் 2008 ஆம் ஆண்டு காலமானார் .

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments