முதல் கடற்கரும்புலித் தாக்குதலை 10.07.1990 அன்று இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலாக நடத்தினர். இத் தாக்குதலானது யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் P 715 “எடித்தாரா” கட்டளைக் கப்பல் மீது நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் அக்கப்பல் மூழ்கடிக்கப்படது.