×

கப்டன் அங்கயற்கண்ணி

கப்டன் அங்கயற்கண்ணி

* முதல் பெண் கரும்புலி.
* முதல் பெண் கடல் கரும்புலி.
* முதல் நீரடி நீச்சல் நடவடிக்கையை மேற்கொண்ட கரும்புலி.

இனப்படுகொலையை நடந்தும் இலங்கை (சிறி லங்கா) கடற்படையின் கண்காணிப்பு கப்பலின் செயல்பாடுகளால் மக்கள் எல்லையற்ற துன்பங்களை எதிர்கொண்டனர். அந்தக் கப்பலின் செயல்பாட்டை நிறுத்தும் நடவடிக்கைக்காக அங்கயற்கண்ணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 18.5 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நீந்தி 36 கிலோமீட்டர் தூரத்தை கடக்குமளவுக்கு மிகவும் திறமையானவர்.

நடவடிக்கையை மேற்கொள்ளும் நாளும் வந்தது. சுமார் 50 கிலோ எடை உள்ள தேவையான பொருட்களை தனது உடலோடு சுமந்து கொண்டு கடலுக்கடியில் நீந்திச் சென்றார். போகும் போது, வெற்றிகரமாக வேலையை செய்து முடிக்காமல் திரும்பி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டே சென்றார்.

கப்பலிற்கு அடியில் கொண்டு சென்ற பொருட்களைப் பொறுத்தி விட்டு, திரும்பி வருவோம் என்றே போனார்கள். ஆனால் கப்பலின் செயல்பாட்டை வெற்றிகரமாக நிறுத்திவிட்டு அதனுடனேயே ஆகுதியாகிவிட்டார்.

ஒரு காலத்தில், இவர் இரவில் வெளியே செல்லப் பயப்பட்டு, தனது அம்மாவை இழுத்துக்கொண்டு போவார் (அந்த காலத்தில் எங்கள் கழிவறைகள் வீட்டிற்கு வெளியில் இருந்தன, இப்போது போல வீட்டுடன் இணைத்து கட்டப்பட்டவை அல்ல). ஆனால் காலத்தின் கட்டாயத்தால் துணிச்சல் மிக்க போராளியாக மாறினார்— அதுவும் கும்மிருட்டில், ஆழ்கடலூடே நீந்திச் சென்று நடவடிக்கையை மேல்கொள்ளும் ஒரு அசாதாரண துணிச்சல் மிக்க வேங்கையாக மாறினார்.

ஆழ்கடலின் இருளும் அமைதியும், சிறிது நேரத்திற்கு மனதிற்கு அமைதியையும் பரவசத்தையும் கொடுத்தாலும், நீண்ட நேரம் நீந்தும் போது, குறிப்பாக இருளில் நீந்தும் போது, அவை மனதில் பிரளயத்தை உருவாக்கும். ஆனால், இப்படியாக மிரளவைக்கும் கடலையும் இருளையும் வென்று, தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்தார்.

 

 

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments