×

கப்டன் கோபி, கப்டன் இசையாளன்  வீரவணக்க நாள் 11.03.1998

கப்டன் கோபி, கப்டன் இசையாளன்  வீரவணக்க நாள் 11.03.1998

கடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் ஆகிய வேங்கைகளின் வீரவணக்க நாள் 11.03.1998. கடற்கரும்புலிகள் கப்டன் கோபி, கப்டன் இசையாளன் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் 11.03.1998 அன்று திருகோணமலை வட்டத்தீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படையின் ரோந்து படகு மீதான கடற்சிறுத்தை பிரிவின் கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட விசைப்படகு மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி.

கப்டன் கோபி (ஆர்வலன்), கடற்கரும்புலி கப்டன் இசையாளன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.

கடற்கரும்புலி கப்டன் ஆர்வலன்/கோபி செபஸ்ரியான் அகஸ்ரின் நுவரேலியா.

வீரப்பிறப்பு: 07.01.1978

வீரச்சாவு:11.03.1998

கடற்கரும்புலி கப்டன் இசையாளன் சுந்தரராஜன் ரவிராஜா இரத்தினபுரம் கிளிநொச்சி

வீரப்பிறப்பு: 07.09.1978

வீரச்சாவு: 11.03.1998

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments