கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் -மாரியம்பாள் இணையரின் இளைய மகனான தண்டபாணி, கோவை பூ .சா. கோ தொழில்நுட்பக்கல்லூரியின் பொறியியல் மாணவர். அக்காலக்கட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாண்ட செய்திகளும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான நிகழ்ச்சிகளும் அவருக்குக் கவலையளித்தன.
02.03.1965 அன்று “உயிர் தமிழுக்கு -உடல் மண்ணுக்கு “ எனத் தொடங்கி தன் இறப்பின் காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்துவிட்டு பீளமேடு கல்லூரி விடுதி அறையிலேயே நஞ்சுண்டு மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது