×

*மிகப்பெரிய சமையல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஈழத்தமிழர் பிரின் பிரதாபன்.*

*மிகப்பெரிய சமையல் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த ஈழத்தமிழர் பிரின் பிரதாபன்.*

பிரபல பிரித்தானிய தொலைக்காட்சியான‌ BBC நடாத்தும் 20 வது MasterChef போட்டியில் ஈழத்தின் உரும்பிராயை பூர்வீகமாகக் கொண்ட பிரின் பிரதாபன் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.

பிரதாபன் பல சவாலான படிகளைத் தாண்டி ஒவ்வொரு தடவையும் தனது சமையல் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இந்த வெற்றியைப்பதிவு செய்துள்ளார். விலங்கியல் சத்திர சிகிச்சை நிபுணரான‌ இவர், தனது வீட்டில் சமைக்கப்படும் பாரம்பரிய ஈழ உணவு வகைகள் என்றுமே சுவையற்று இருப்பதில்லை என்றும், தனது பின்னணி, கலாசாரம் மற்றும் பெற்றோர்களின் ஆதரவுமே தனது வெற்றிக்கு வழிவகுத்தது என்று அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். இது தனது வெற்றி மட்டுமல்ல தனது பெற்றோரின் வெற்றியும் என்று கூறினார். பிரதாபனின் வெற்றி, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் சாதிக்கும் பல புலம்பெயர்ந்தோருடைய வெற்றியைப் போன்றதே.

போட்டியின் மதிப்புக்குரிய நடுவர்கள், பிரதாபனின் தனித்திறமை பற்றி சிறப்புடன் சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

29 வயதான பிரதாபன் பிரித்தானியா எசெக்ஸ் எனும் இடத்தில் வளர்ந்தவர். இப்போது ப்ரிஸ்டல் பகுதியில் வசிக்கிறார். இவரின் பூர்வீகம் ஈழத்தில் உரும்பிராய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ நூலகத்தின் (TE Library) சார்பில் எமது நல்வாழ்த்துகளை பிரதாபனுக்கு சொல்கிறோம்.

Veterinary surgeon lifts Masterchef trophy

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments