11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றி வளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்கள்.
12.08.1990 அன்று இரவு 11.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து ஏறாவூர் வைத்தியசாலையிற் சிகிச்சைபெற்று வந்த பொதுமக்கள் பத்துப் பேரையும் வைத்தியசாலையினுள் வைத்தே வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தார்கள்.
மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.