“தம்பிரான் வணக்கம் ” – 1578 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை என்றிக்கே என்றீக்கசு என்பவர் எழுதினார். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம். இது தமிழில் அச்சில் வெளிவந்த முதல் நூலாகக் கருதப்படுகிறது. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ்.
நூல் பதித்த இடம் கொல்லம். பதித்த நாள் 20.10.1578. இந்த நூலின் அசல் பிரதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஹெவ்டன் நூலகத்திலும், இதன் நகல் பிரதி சென்னை கன்னிமாரா பொது நூலகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.