×

முதல் பெண் எல்லைப்படை மாவீரர்  வீரவேங்கை தெய்வானை

முதல் பெண் எல்லைப்படை மாவீரர் 

 வீரவேங்கை தெய்வானை

 சிவராசா தெய்வானை

 வீரச்சாவு: 20.11.2000

தாயின் வித்துடலுக்கு மகனும், அவனது தந்தையும் மண்போட்டு அஞ்சலி செய்த அந்த நிமிடப் பொழுதுகள் தமிழீழ வரலாற்றின் புதிய பக்கம். தமிழீழப் பெண்அ சாதாரணமானவள் யதான். வரையறைகள் தகர்த்து களம் வந்ததும், கடலிலும் தரையிலுமாக சாதனைகள் படைத்தும், படைத்துவருவதும் சாதாரண நிகழ்வுதான்.தம் பிள்ளைகள் போராடுவது மட்டும் போதாது விடுதலைக்கு என்பது உணர்ந்து பின் களவேலைகளிலும் மருத்துவ நிலைகளிலும்ப ராமரிப்பாளர்களாவும்,ஆபத்தான,இக்கட்டான காலப் பொழுதுகளில் தாய்க்கோழியாய் பாதுகாத்தவர்களாகவும்,தகவல் சேகரிப்பர்களாகவும் என இந்த மண்ணின் அன்னையர் சாதித்தவை  ஏராளம். ஆயினும் இத்தனை இருந்தும் சமூக வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே ஒரு தாய்நேரடியாகக் களமுனை சென்றதும் சண்டைப் பொழுதுதொன்றில் தன் குருதி நிலத்தில் சிந்தி வீரச்சாவடைந்தும்

இதுவே முதல் முறை.

விழுதுகள் மட்டுமா? வேர்களும் கூட

திட்டமிட்டு எம் இனத்தின் மீது போரைத்தொடுத்துள்ள சிங்கள அரசின் இன அழிப்புக்கு தமிழர்கள் அனைவருமே பலியாகிக் கொண்டுருக்கும் போது போராட்டக் களத்தில் ஏன் இளையவர்கள் மட்டும் போராடவேண்டும் என்ற விதிமுறை? சாவு தாயென்றோ,

மகவென்றோ பார்க்காது தன் கோரப் பற்களை எல்லோர் மீதும் பதிக்கும் தேசத்தில் எல்லோருமே போராடினால்தான் வாழ்வு. தெய்வனை அக்கா களம் வந்ததற்கு இதுவே பிரதான காரணம். 1992 ஆம் ஆண்டு காலப்

காலப்பகுதிலேயே இயக்கத்தில் இணைந்து கொண்டுவிட வேண்டும் என்ற விருப்பு அளவிற்குள் அதிகம்.ஆனால் திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்ட நிலையில் எப்படி? அதைவிட நான் போய்விட்டால் தன் குழந்தையின் எதிர்காலம் என்ன? என்று ஆயிரம் போராட்டங்கள்.என்றாலும் கூட தனக்கு ஒன்றென்றால் மகனை இயக்கம் பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கைகள் அந்த தாய் இணைத்துக்கொள்ளும்படி போராளிகளின் முகாம் வாசல்களுக்குச் சென்றதும், திருமணமானவர் என்பதறிந்து போராளிகள் அவரை திருப்பி அனுப்பியதும் கடந்தகாலம்.

தேசத்தின் விடுதலைக்கான பணியில் கிராமிய, எல்லைப்படைகளுக்கென மக்களும் பங்குகொள்ள ஆரம்பித்த காலப்பகுதி. தெய்வனை அக்காவைப் பொறுத்தவரை ஒரு வசந்த காலமாகவே இருந்தது. கிராமிய பயிற்சி பாசறைகள் ஆரம்பிக்கப்பட்ட பொழுதுகளில் அவர்தான் முதல் ஆளாக நிற்பார். அடுத்த நாளே இராணுவத்துடன் சண்டை நடக்கப் போவதாக நினைத்துக் கொண்டுதான் பயிற்சி எடுப்பர். அந்த உற்சாகமும், வேகமும் இதுவரை காலமும் எங்கே போயிருந்தன என்று நினைக்க தோன்றும் வண்ணமாக ஆச்சரியத்தை தரும்.

கிராமிய பயிற்சிப் பாசறையில் இருந்து நேரடியாக்க் களம் செல்லவென எல்லைப்படையொன்றை உருவாக்கும் நோக்கில் பெயர் விபரங்கள் போராளிகளால்  கோரப்பட்ட பொழுதில் முதல் உயர்ந்த கைகள் தெய்வானை அக்காவிற்குச் சொந்தமானவியாகவே இருந்தன. அவரின் பெயரை முதலாவதாகப் பதிவு செய்திருந்தபோதும் எல்லைக்கென அப்பிரதேசத்திலிருந்து மக்கள் களம் நோக்கிச் செல்லும்போது  தெய்வானை அ்அக்கா தவிர்க்கப்பட்டு விடுவார்.அந்தப் பிரதேசப் பொறுப்பாளாரகவுள்ள போராளிக்கும் தெய்வானை அக்காவிற்கும் நீண்ட வாக்குவாதம், போராட்டம் எல்லாம் நடக்கும்.இறுதியில் “ நீங்கள் அடுத்தமுறை போகலாம் இப்ப வீட்டை போங்கோ மகன் தேடிக்கொண்டிருப்பான்” என்ற வார்த்தைகளோடு அவரின் களமுனைப் பயணம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்படி ஓரிரு தடவைகள் தனக்கான அனுமதி மறுப்பு கிடைத்தபோதும் அவர் தன் முயற்சியில் இருந்து விலகிவிடத் தயாராக இல்லை. மீண்டும் மீண்டும் வந்து நிற்பார். அந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கவே செய்தது.  “அக்கா இந்தமுறை உங்களை அனுப்புறம். ஆனால் களத்துக்கு இல்லை. களமுனைக்குப் பின்னுள்ள மருத்துவ நிலை ஒன்றுக்கு இப்ப அங்க நில்லுங்கோ அடுத்தமுறை முன்னணிக் காவலரணுக்கு கட்டாயம் விடுறம்”

அப்பிரதேச எல்லைப்படைக்குப் பொறுப்பாக இருந்த அந்தப் போராளியின்

வார்தைகள் தெய்வானை அக்காவுக்கு தேன் வார்த்தையாக இருந்தன. மனதுக்குள் ஒருமூலையில் சந்தோசக் குயிலொன்று கூவியதோ என்னவோ அந்த முகம் சிரிப்பில் விரிந்து மலர்ந்திருந்து.அந்த தற்காலிக மருத்துவ நிலை தெய்வானை அக்காவின் போராட்ட வேகத்தை மேலும் புடம் போட்டு களத்துக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தியதை அவரை அங்கு அனுப்பிய போராளிகளில் ஒருவர் கூட அறிந்திருக்கவில்லை. வழமையாக மருத்துவ நிலைகளுக்குப் பணிசெய்யச் செல்பவர்கள்

ஐந்து அல்லது ஏழு நாட்களில் பணி முடித்து திரும்பி வந்து விடுவதே வழமையாக இருக்க, தெய்வானை அக்காவால் மட்டும் அப்படி விட்டுவர முடியவில்லை.மகனைக்கூப்பிட்டு இடையிடையே பார்த்துக் கொண்டு ஒரு மாதம் வரையும் மருத்துவ மனையிலேயே நின்று கொண்டார்.

களமுனையில் இருந்து பல விதமான காயங்களோடும் மருத்துவ நிலைக்கு வரும் இளம் போராளிகள் அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதும் அவரது வார்த்தைகளிலேயே வெளிப்படும். “ இந்தக் குழந்தைகள் எல்லாம் போராட, இவ்வளவு வேதனை அனுபவிக்க

நாங்கள் மட்டும் வீட்டில் இருக்கிறது எவ்வளவு கொடுமை” ஒருமாத காலம் அவர் மருத்துவ நிலையில் நின்று பணி புரிந்த போது அங்கு கடமையில் நின்ற மருத்துவப் போராளி ஒருவர் தெய்வனை அக்காவை  அவரது செயற்பாடுகளைப் பற்றிக் கூறும் போது “ ஒரு காயமடைந்த போராளியின் பராமரிப்புபற்றி நாங்கள் அலவிற்கு எப்பவும் எதுவுமே சொல்லிக் கொடுத்ததில்லை. தானே தீர்மானித்து, தானே எல்லாம செயவா,மருந்துகளை எங்களிடம் பெற்றுக்கொடுப்பா, காயக்கார்ர்களைத் தாங்கி வரும் வாகனம் வாசலுக்குள் நுழைகிறது எனில்

வாகனம் நிறுத்தப்படுவதற்கு முன்னே காவு தடியுடன் அவ்விடத்துக்குச் சென்று விடுவா. பெரும்பாலும் அவாவின் மதியச்சாப்பாடு நேரம் மாலை மூன்று அல்லது அதற்குப் பின்னாகத்தான் இருக்கும்.ஆனால் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் வாகனச் சத்தம் கேட்டுவிட்டால் அதனை அப்படியே போட்டு விட்டு வாகனம் நிற்கும் இடத்துக்கு ஓடிவிடுவார். வழமையாக ஐந்து நாடகளுக்கு ஒருமுறை பராமரிக்க வருபவர்கள் மாறிக் கொண்டிருப்பார்கள்.புதிதாக வருபவர்கள், புதிதாக வருபவரகளுக்கு அவ்விடத்து நடைமுறைகளை விளங்கப்படுத்துவதும், பராமரிப்பு முறைகளைச் சொல்லிக் கொடுப்பதுமே எமக்கு பாரிய வேலைகளாக இருக்கும். ஆனால் தெய்வானை அக்கா நின்ற ஒரு மாதமும் எங்கள் ஒருவருக்கும் அந்த வேலை இல்லை. வருகின்ற புதியவர்களுக்கு அவரே எல்லாம் சொல்லிக்கொடுத்து, அவரகளுடன் சேர்ந்துதானே எல்லாப் பணிகளையும் செய்துவிடுவார்.”

“கலியாணம் செய்து ஒரு பெடியனையும் பெத்து விட்டதால்தான் நான் இப்படி இருக்கிறன்.இல்லையென்றால் எப்பவோ உங்களோட வந்திருப்பன்” என்று அடிக்கடி சொல்லுவார். “ இந்தச் சின்னப் பிள்ளைகள் எல்லாம் காயப்பட்டு அவர் நாங்கள் மட்டும் வீட்டில இருக்கிறது எவ்வளவு கொடுமை. நானும் சண்டைக்குப் போகேணும்” என்று அதன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பா. தெய்வானையக்காவேலை செய்யிற வேகத்தைப் பார்த்தால் மற்றவர்கள் சோம்பிப் போய் சும்மா இருப்பதுப் போலத் தோன்றும்.சாதாரணமாக பணி செய்யவருபவர்கள் பெரும்பாலும் சட்டை அல்லது பாவாடை சட்டைகளுடன்தான் வருவார்கள். அந்த உடையுடன் காவுதடியில் வைத்து காயப்பட்டவர்களைத் தூக்கிச்செல்ல தயக்கம் காட்டுவார்கள். இதிலும் தெய்வானை அக்கா விதி விலக்குத்தான். ஓடி ஓடி “ ஸ்ரெச்சர்” தூக்குவா. அவா அப்படி தூக்குவதைப் பார்த்திட்டு மற்றப் பிள்ளைகளும் தூக்குவார்கள். எங்களால் மறக்க முடியாத ஒருவர் என்றால் அது தெய்வானை அக்கா தான்” இப்படி, தான் நின்ற ஒரு மாதமும் தன,அன்னை வருத்தி அந்தப் போராளிகளுக்காவே உழைத்துவிட்டு வீடு திரும்பியவருக்கு களமும்

காயமடைந்த போராளிகளுமே எப்போதும் கண்களுக்குள் நிற்கும்.அடுத்த முறை எப்படியும் களமுனைக்குப் போக வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தும். “என்ன ஏதோ உடையிற மாதிரியெல்லாம் சத்தம் கேட்குது”

“அம்மா!!”

“சரியான கதை. என்ன பழுதாம். ஏன் திடீரென்று நிண்டுட்டுது”

“அக்கா குறை நினைக்காதேயுங்கோ. வாகனம் பழுது இப்போதைக்குஎடுக்க முடியுமெண்டு நான் நினைக்கேல்ல”

 “அடக் கடவுளே ! புளியம் பொக்கணைச் சந்தி எங்க. வட்டக்கச்சிப்பண்ணை எங்க……… என்ன மாதிரி நடந்து போவமா” அதை விட வேறு வழியல்ல. குறிப்பிட்ட நேரத்துக்குள்ள உங்களை நான் அங்க கொண்டுபோய் விடவேணும்”

“ போவம் தங்கச்சி “

“ அக்கா மிச்ச ஆக்கள் பிரச்சனையில்ல. நீங்கள் அவ்வளவு தூரம் நடப்பீங்களே?

“நான் நடக்காத தூரமா. வயலில களை பிடுங்கிற காலத்தில் எவ்வளவு

தூரங்களை நடந்து முடிச்சிருப்பன்”

“அப்ப சரி. எல்லோரும் நடவுங்கோ”

“அக்கா! உங்களுக்கு கவலை இல்லையோ மகனை விட்டிட்டு வாறதுக்கு”

“கவலை தான். மகனை நினைச்சால் கவலை தான்”

“அப்ப ஏன் இவ்வளவு பிடிவாதமா நிண்டு எல்லைக்குவெளிக்கிட்டனீங்களா?

முதல் மாதிரி மெடிசில் வந்து நின்று காயப்பட்டவர்களை பராமரியுங்கோவன்”

“இல்லை தங்கச்சி…. ஒரு மாதம் நான் அங்க நின்றநான் தானே. அந்தச் சின்னனுகள் எல்லாம் காயப்பட்டு வர, நாங்கள் பராமரிக்க

நிக்கிறதை நினைக்க எனக்கு வெட்கமாக இருக்கும். அதனால் தான் லைனுக்கு போகவேணுமெண்டு நினைச்சனான். எனக்கேதும் என்றால் மகனை நீங்கள் வளர்க்கமாட்டீர்களா? வளர்ப்பியள் தானே?”

“அப்ப நீங்கள் கலியாணம் செய்ய முன்னம் ஏன் இயக்கத்தில சேரல்ல?”

“எனக்கு அப்பா அம்மா இல்ல . ஒரு வீட்டில் வேலைக்கு நிண்டனான். அந்த வீட்டைத் தவிர வெளி உலகம் தெரியாது எனக்கு . அவைதான் இந்தக் கலியாணத்தையும் எனக்குச் செய்து வச்சினம்.கலியாணம் செயத பிறகு தான்

எனக்கு எல்லோரும் இயக்கத்துக்குப் போறது கூட தெரிய்சுது. இவ்வளவு பிள்ளைகள் நாட்டுக்காக எவ்வளவோ செய்திட்டு செத்துக் கொண்டிருக்க நான் மட்டுமேன் வீணாக காலத்தை போக்கிறன் என்று யோசித்து விட்டு“ எப்பவாவது எனக்கும் சந்தர்ப்பம் வராமலா போகும் அப்ப பார்ப்போம் என்று நினைப்பன். என்பர் சாவும் பிரயோசனமானதாக இருக்கவேணும் என்று அப்பதான் நினைச்சன்.

“அப்ப சாகிறத்துக்கோ சண்டைக்கு வாறியள். சண்டைக்குப் போற எல்லோரும் சாகிறேல்லக்கா. உங்களுக்குத் தெரியும் தானே”

“இல்லை இல்லை, நான் சாகிறத்துக்கெண்டு சண்டைக்கு வரேல்ல.என்ர அப்பத்தைய  மனநிலையைச் சொன்னனான். இப்ப நிறைய சண்டை பிடிக்கவேணும் என்றுதான் நினைக்கிறன். இதுதான் இப்போதைய நிலைப்பாடு”

தெய்வானை அக்கா எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த சந்தர்ப்பம் விரைவாகவே  வந்து சேர்ந்தது. கிளாலியில் எம்மவர் அமைத்திருந்த காவல் நிலைகளில் ஒரு பகுதியில்்குறிப்பிட்ட காலத்துக்குப் பணியாற்ற தெரிவுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் தெய்வனை அக்காவும் புறப்பட்டு, வழியில் வாகனம் பழுதாகி விட, புளியம் பொக்கணைச் சந்தியில்

இருந்து வட்டக்கச்சி பண்ணை வரையும் நடந்து சென்ற போது தன் வாழ்க்கை வரலாறு முழுவதையும் அந்தப் போராளியிடம் கூறியபடி நடந்த தெய்வானைஅக்கா , திரும்பவும் எங்களைச் சந்திக்கவே இல்லை. ஒரு மகனின் தாயாக மட்டுமன்றி இந்த மண்ணின் தாயாகவே மாறிவிட்ட அந்த வீரப் பெண்மனி, இந்த தேசத்துக்கு கிடைத்த பேறு என்பதைத் தவிர வேறெந்ந வார்த்தைகளால் அந்தத் தாயை விபரிக்க முடியும்?.

நினைவுப் பகிர்வு – தமிழவள்

நன்றி சூரியப்புதல்வர்கள் 2005

விழுதுகள் மட்டுமா? வேர்களும் கூடக

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments