போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று வணக்கம் செலுத்துவர். தமிழீழத் தேசிய கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி வணக்கம் செய்தல் என்பன மாவீரர் நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெறும்.மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்படுவர்.
2009 ஈழப் போராட்டம் மௌனித்த பின் இலங்கை அரசால் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.