
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்து கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன்ன் இணைந்தது.
பெயர்க் காரணம்
“முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ – மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
வேறு பெயர்கள்
சேயோன் – சேய் என்றால் குழந்தை அல்லது மகன் என்பதாகும் முருகன் குழந்தையாக காட்சி அளிப்பாதால் இந்த பெயர் காரணம்
அயிலவன் – வேற்படைஉடையவன், முருகக்கடவுள்.
ஆறுமுகன் – ஆறு முகங்களை உடையவன்.
முருகன் – அழகுடையவன் அல்லது அனைத்து சக்திகளையும் பெற்ற முழு முதற் கடவுள் என்பதன் அர்த்தம் .
குமரன் – குமர பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவன்.
குகன் – அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளி இருப்பவன் .
காங்கேயன் – கங்கையால் தாங்கப்பட்டவன் அல்லது கங்கையின் மகன் என்றும் பொருளாகும்
வேலூரவன் – வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன் முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் என பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம் தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரை சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் – வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
சரவணன் – சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவன்.
சேனாதிபதி – சேனைகளின் தலைவன் அல்லது (சேனை நாயகன்)
வேலன் – வேலினை ஏந்தியவன்.
சுவாமிநாதன் – தந்தைக்கு பிரணவ மந்திரத்தை குருவாக உபதேசம் செய்தவன்.
கந்தன் – சிவபெருமாளின் நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீ பொறி பொற்றாமரை குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தகத்தில் பட்டு முருகன் குழந்தையாக தொன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்
கார்த்திகேயன் – கார்த்திகைப் பெண்களால் பாலுட்டி சீராட்டி வளர்க்கப்பட்டவன்.
சண்முகன் – ஆறு முகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆனதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
தண்டாயுதபாணி – தண்டாயுதத்தை ஏந்தியவன் அல்லது (பண்டார நாயகன்)
தஞ்சபாணி அல்லது தண்டபாணி – முருகபெருமாள் ஞானபழத்திற்க்கு ஏமாந்து ஆண்டி பண்டாரமாக தமிழ்நாட்டிலே தமிழ் கடவுளாக தஞ்சமடைந்ததால் தஞ்சபாணி என்ற பெயரே தண்டபாணியாக மாறியது.
கதிர்காமன் – வள்ளியை வேடுவர் குலத்தில் இருந்து காதல் திருமணம் செய்து கொள்ளும்போது அழகிய காமதேவனாகவும் முருகன் பரமசிவன் நெற்றிகண்ணில் இருந்து தீ கதிராக பிறந்தவன் அல்லவா அதனால் கதிரும் காமனும் சேர்ந்து கதிர்காமன் என்ற திருபெயரில் வள்ளியை கந்தர்வ திருமணம் செய்து கொள்வதால் இப்பெயர் ஆனது இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் முருகபெருமாளை இவ்வாறு வணங்கபடுகிறது.
முத்துவேலன் – எட்டுக்குடியில் தெய்வானை (அஞ்சுகவல்லி) வள்ளி (கோமளவள்ளி) உடனுரைய எட்டுக்குடி முத்துவேலர் சுவாமி எட்டு திசையும் காப்பார் என்பதை குறிக்கின்றது.
வடிவேலன் – வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருபெயரால் அழைப்பார்கள்.
சுப்ரமணியன் – மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவன். அல்லது இனியவன் என்றும் பொருளாகும்.
மயில்வாகனன் – மயிலை தனது வாகனமாக கொண்டவன்.
ஆறுபடை வீடுடையோன் – முருகனின் சாதனை புரிந்த இடங்களை கோவிலாக மறுவி அதை ஆறுபடையப்பன் என்ற பெயரும் உள்ளது.
வள்ளற்பெருமாள் – வள்ளியை மணந்ததாலும் அல்லது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளை கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர் காரணம்
சோமாஸ்கந்தன் – சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையாம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
முத்தையன் – முத்துகுமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயர் ஆகும்.
சேந்தன் – தன்னை வணங்கும் பக்தர்களை இன வெறுபாடின்றி ஒன்றினைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் என பெயர்.
விசாகன் – முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என பெயர் ஏற்பட்டது.
சுரேஷன் – வட மாநிலங்களில் அழகுக்கு சுரேசன் என்று பொருள் முருகன் அழகுக்கு அதிபதி என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
செவ்வேல் – சேவல்வேல் என்பதை மறுவி கால போக்கில் செவ்வேல் என மாறியது.
கடம்பன் – சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாக சேர்த்து கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவகுமரன் – சிவபெருமாளின் திருமகன் அல்லது சிவனின் குமரன் என்பதேயாகும்.
வேலாயுதன் – முருகன் தனது கையில் இருக்கும் வேலயே ஆயுதமாக கொண்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.
ஆண்டியப்பன் – ஞானபழம் கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.
கந்தசாமி – தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தொன்றிய கடவுள் என்பதால் கந்தகடவுள் அல்லது கந்தசாமி என பெயர் ஏற்பட்டது.
செந்தில்நாதன் – சிந்தனைசிற்பி என்றும் சிந்தனைநாதன் என்பதை மறுவி செந்தில்நாதன் ஆக மாறியது அதாவது முருகன் தனது உயர் சிந்தனையால் சூரபத்மனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
வேந்தன் – மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்
விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
கங்கை தன் கரங்களால் சிவபெருமாளின் நெற்றிகண்ணீல் இருந்து வெளிபட்ட தீப்பிழம்பின் கருவில் தொன்றிய குழந்தை முருகனை ஏந்தியதால் காங்கேயன்.
சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணபவன்/சரவணமூர்த்தி.
கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
தாமரை மலரின் கந்தகத்தில் தொன்றியதால் கந்தன்
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன்
ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகம் / திருமுகம்
இவ்வாறு தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.