தலைக்கவர்
இது மேற்குலகின் ‘Helmet covering cloth’ போன்றது. வரிப்புலி உருமறைப்பாலான தலையில் அணியும் ஒருவிதமான துணியாகும். இதன் தோற்றமானது இது இசுரேலியர்களின் தலைச்சீரா துணி போன்றல்லாமால் கொஞ்சம் நீளமானது. ஒரு நீளமான உருள்கலன் போன்ற வடிவிலான இதன் ஒரு முனையில் இருக்கும் திறவல் மூலம் தலையில் போடப்படுகிறது. பின்பக்கம் மடித்து விடப்படும் (படிமத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று)
இது சோதியா படையணியினரால் மட்டுமே அணியப்பட்டதாகும்.
காதுப்பஞ்சு
இது உந்துகணை சூட்டாளரும் அவரது துணைவனும் உந்துகணை வேட்டொலி தம் காதினை பாதித்துவிடாதவாறு காதினுள் வைத்துக்கொள்ளும் ஒரு சாதாரண பஞ்சாகும்.
இதை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உந்துகணை அடித்த பெரும்பாலானோர் அணிந்திருப்பர்.
கீழ்க்கண்ட படிமத்தில் உந்துகணை சூட்டாளரின் துணைவனின் காதில் இது தெரிவதை (வெள்ளை நிறத்தில்) நோக்குக.
தொடரிலக்கம்