ஜெயந்தன் படையணி கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்டு காணப்பட்டது. சிறப்பு மரபுவழிச் சண்டைப் படையணியான இது பல சண்டைகளில், குறிப்பாக தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை (1993), ஜெயசிக்குறு நடவடிக்கை, 1996 முல்லைத்தீவுச் சமர், கிளிநொச்சிப் போர் (2008-2009), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் (2000) ஆகியவற்றில் பங்கு பற்றியது. இப்படையணி ஜெயந்தன் என்ற போராளியின் நினைவாகப் பெயரிடப்பட்டது.