×

காந்தள் / கார்த்திகைப் பூ

  • தமிழீழத் தேசிய மலர்.
  • தமிழ் நாட்டின் மாநில மலர்.
  • சங்க இலக்கியங்களில் 64 தடவைகள் குறிப்பிடப்படும் மலர்.
  • எட்டுத்தொகையின் எட்டு நூல்களிலும் குறிப்பிடப்படும் பூ.
  • குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 வகையான பூக்களில் முதன் முதலில் குறிப்பிடப்படும் பூ.
  • காந்தள் பூவானது கார்த்திகை மாதத்தில் பூப்பதால் ”கார்த்திகைப்பூ” எனப்படுகின்றது.

கண்களை வலிக்கச் செய்யுமளவு அழகுள்ளதால் அப்பூ ”கண்வலிப்பூ” எனவும் சொல்லப்படுகின்றது.

  • ”சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தள் {திருமுரு.43}” என பார்ப்பதற்கு நெருப்புச் சுடர் போல் இருப்பதால் வண்டுகள் மொய்க்காத மலர் (மாலை) எனவும்;
    ”ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் { – குறு 284/1-3}” எனப் போரில் தாக்குண்ட யானை மீது தைத்துள்ள அம்புகள்  போலப் பாறையில் பூக்கள் (காந்தள்) பூத்திருப்பதாகவும், இன்னும்  பலவாறும் சங்க இலக்கியங்கள் காந்தள் பூ பற்றிக் கூறுகின்றன.

 

  • இடைக்காலத்தில் கம்பர் (காந்தளின் மலர்ஏறிக் கோதுவ கவின் ஆரும்), அப்பர் (மருங்கு நின்ற புனற் காந்தள் கை காட்டும்) போன்றோரும் இம் மலர் குறித்துப் பாடியுள்ளனர்.

 

  • அண்மைக் காலக் கவிஞரான இன்குலாப் கூட ”காந்தள் நாட்கள்” என்ற தலைப்பில் எழுதிய கவிதைத் தொகுப்பு சாகித்திய அகாடாமி (2017) விருது பெற்றிருந்தது.

இத்தகைய மாமலரே, மாவீரர்களிற்கான குறியீட்டுப் பூவாகவுமுள்ளது.

  • ”மாமலர் போற்றுவோம், மாவீரரினைப் போற்றுவோம்”
    – இலங்கநாதன் குகநாதன்.

 

  • கார்த்திகைப்பூவின் கிழங்குகள் நச்சுத்தன்மை உடையவை என்கிற அடிப்படை புரிதல் தமிழர்களுக்கு உண்டு. அதற்கு மேலாக அது தமிழீழத்தின் தேசிய மலர் ஆக்கப்பட்டதற்கும், தமிழ்நாட்டின் மலராக செயல்வடிவம் பெற்றதற்கும் நிறையக் காரணங்கள் இருக்கின்றது.

 

  • தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றுடன் கலந்துவிட்ட “கார்த்திகைப் பூ” என்று தமிழர்கள் அழைக்கும்செங்காந்தள் மலர், தமிழ் மன்னர்கள் போருக்குச் செல்லுப்போது செங்காந்தள்  மலர் மாலைகளை அணிந்துகொண்டு போனதாக எமது தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.“காந்தளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர்”

 

  • செங்காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தைப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் விளக்குகின்றன.

 

  • கார்த்திகை மாதத்தில் திசையெங்கும் பூத்து குலுங்குவதாலும், தமிழீழத்தின் தேசியக்கொடியில் உள்ள வண்ணங்களான  சிவப்பு, மஞ்சள் வண்ணங்களை கொண்டுதாலும் தமிழீழத்தின் தேசிய மலராகவும், தமிழ்நாட்டின் மலராகவும் அறிவிக்கப்பட்டது.

 

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments