கரம்பொன் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள சப்த தீவுகளில் பெரிய தீவான லைடன் என ஒல்லாந்தரால் சூட்டப்பட்ட வேலணைத்தீவில் உள்ளது கரம்பொன் என்னும் கிராமம். கதிரன் என்னும் பிரதானியின் அதிகாரத்தின் கீழ் இருந்தமையால் கரம்பன் என்ற பெயர் வந்ததாக ஒருகருத்து உள்ளபோதும். முருக வழிபாட்டின் வழி வந்த குடிமக்கள் வாழ்ந்த ஊர் என்பதால் கடம்பன் என அழைக்கப்பட்டு பின்னர் கரம்பன் என்று அழைக்கப்பட்டு தற்போது கரம்பொன் என மாற்றம் பெற்றதாகவும் கூறுவார்கள்.
கரம்பொன்னை சுற்றியுள்ள தீவுகளில் இருந்தும் இந்தியா இலங்கையில் இருந்தும் யாத்திரை செய்யும் பலர் இத்தீவில் தங்கிச் செல்வதால் இத்தீவில் மடங்கள் அமைத்து அவர்களுக்கு உணவும், உறைவிடமும் கொடுத்து சிறப்பித்த ஊராக கரம்பொன் விளங்கியுள்ளது. பின்னர் இவ் மடங்கள் ஆலயமாக மாற்றப்பட்டபோதும் தற்போதும் இவ்விடங்கள் மேற்கு மடம், கிழக்கு மடம் என்றே அழைக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது. இறங்கு துறைகளில் அமைக்கப்பட்ட மடங்கள் அழிவடைந்து விட்ட நிலையில் மங்களவார மடம் மட்டும் அழிவடையும் நிலையில் தற்போதும் வரலாற்று ஆதாரமாகக் காணப்படுகின்றது.
1848 தொடக்கத்தில் இருந்து இந்த மடம் இலங்கை இந்திய வணிகர்கள் தங்கிச் செல்வதற்காக தன் சேவையை செய்து வந்துள்ளது. இங்கு சைவ சமய வழிபாடு மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முற்பட்ட கண்ணகியம்மன் வழிபாட்டுத்தடம் கரம்பொன் பிரதேசத்தில் காணப்படுகின்றது. சிறுபயிர் செய்கை, புகையிலை செய்கை கால்நடை வளர்ப்பு என்பன வற்றை கொண்டு பொருளாதாரத்தை வளப்படுத்திவரும் கரம்பொன் பல தலை சிறந்த கல்வியலாளர்களை உருவாக்கியுள்ளது . 1951ம் ஆண்டளவில் இப்பகுதியில் கல் உடைப்பதற்காக வெடி வைத்த போது 1ம் இராஜ இராஜ சோழன் காலத்து நாணயங்களும் ஒரு அம்மன்சிலையும் இங்கு ஒரு பெட்டியில் கிடைக்கப்பெற்றது.
இவ்விடத்தில் அச்சிலையை வைத்து தான்தோன்றி மனோனமணி அம்மன் ஆலயத்தை அமைத்து மக்கள் இன்றுவரை வழிபட்டு வருகிறார்கள். ஈழப் போரட்ட காலத்தில் இத் தீவு இரணுவக்கட்டுப்பாட்டில் இருந்த போது மக்கள் இடம்பெயர்ந்து உலகெல்லம் பரவத் தொடங்கினர் ஈழ விடுதலைக்கு பல மாவீர்ர்களையும் போரளிகளையும் தந்த கரம்பொன் பல படைப்பாளிகள், அறிஞர்களையும், உழைப்பாளிகளையும் இத்தேசத்துக்கு தந்து தனக்கான புராதனப்பெருமையோடு தலைநிமிர்ந்து நிற்கிறது. தனிநாயகம் அடிகள், தமிழறிஞர் அல்பிரட் தம்பிஐயா, தொழிலதிபர், அரசியல்வாதி பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, முன்னாள் யாழ்ப்பாண ஆயர் வி. நவரத்தினம், அரசியல்வாதி எஸ். புண்ணியமூர்த்தி, வானொலி அறிவிப்பாளர் நீ. வ. அந்தோனி, அண்ணாவியார்
வட்டக்கச்சி வினோத்