ஈழத்தில் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களின் ஒன்றான கிளாலி ஒருகாலத்தில் யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்களின் இணைப்பு பாதையாக இறங்கு துறையாக யாழப்பாணத்து மக்களை இலங்கையின் மற்றய பகுதியோடு இணைக்கும் பாதையாக இருந்தது கிளாலி. வடக்கில் உக்கிரமாக போர் நடந்து கொண்டிருந்தபோது யாழ்பாணத்துக்கு கடல் வழியாக செல்லவும் யாழ்பணத்தில் இருந்து வன்னி மண்ணுக்கு மக்கள் இடம்பெயர்ந்து வரவும் கிளாலி ஒரேயொரு கடல் வழி பாதையாக இருந்தது.
இக் கிராமம் பழமைவாய்ந்த கிராமமாகும். தென் எல்லையில் கிளாலி கடல்நீரேரியும், வடக்கு எல்லையில் ஏ9 வீதியும், மேற்கில் தென்மராட்சி பிரதேசத்தையும், கிழக்கே முகமாலை அல்லிப்பளை பிரதேசங்களையும் தன் எல்லைகளாகக் கொண்ட அழகிய கிராமம் கிளாலி. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் கடற்தொழில், விவசாயம், தென்னைச் செய்கை என்பன காணப்படுகின்றது.
இங்கே யாக்கப்பர் யாத்திரைத் தளம். சந்தியம்மையோர் ஆலயம், புனித தொம்மை அப்பர் ஆலயம், கண்மணி மாதா ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், வியாகுல மாத ஆலயம், மற்றும் வீரபத்திரர் கோவில், வித்தகப்பிள்ளையார் கோவில், நிலுவில் பிள்ளையார் கோவில், ஜயனார் கோவில், நாச்சியார் கோவில் என ஆன்மீகச் சிறப்பு பெற்ற கிராமம் கிளாலி.
கொடுக்கிளாச்சி குளம், நீரவில் குளம், தாமரைக்குளம், கனிவெளிக்குளம், கோவாளை வெளிக்குளம் போன்ற குளங்கள் நீரேந்தம் பகுதியாகவும் விவசாய மற்றும் தென்னை பயிர்செய்கைக்கு உகந்த நீரையும், நிலத்தடி நீரை பேனவும் இக் குளங்கள் உதவுகின்றது.
அரசர் காலம் மற்றும் போத்துக்கேயர் காலத்தில் முக்கிய துறைமுகமாக கிளாலி விளங்கியது. போத்துகேயேர் பாதுகாப்பாக கிளாலி துறைமுகத்தின் ஊடாக இறங்கி பச்சிளைப்பள்ளியை அடைந்தனர். இங்குள்ள சைவ ஆலயத்தை இடித்து கிருத்தவ ஆலயங்களை நிறுவியதாக வரலாறு கூறுகின்றது.
பல கோட்டைகளின் இடிபாடுகள் கிளாலிப் பிரதேசத்தில் காணப்படுகிறது. தமிழர்கள் தொடர்பாக அகழ்வாரச்சிகள் இல்லாததும் அரசு தமிழர்களின் தொன்மையை மூடி மறைப்பதும் தமிழர்தொடர்பான வரலாற்று சின்னங்களும் வரலாற்று ஆய்வுகளும் மூடி மறைக்கப்படுகிறது.
கிளாலி என்னும் பெயர் நிலச் சுவந்தர்கள் வாழ்ந்ததன் காரணமாக நிலக்கிளார் என்பது மருபி கிளார், பின்னர் கிளாலி என்று மருபி ஊரின் பெயர் கிளாலி என வந்திருக்கலாம் என்று சொல்லியல் ஆய்வாரள்கள் கூறுகின்றனர்.
ஈழ போரியல் வரலாற்றில் தியாகங்களையும் வீரத்தையும் தன்னுள் அடக்கி காட்சி வரலாற்றோடு வாழ்கிறது கிளாலி.
– வட்டக்கச்சி
– வினோத்