×

கொக்கட்டிச்சோலைப் படுகொலை – 28.01.1987

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு  இயற்கைவளம் நிறைந்த பகுதியாக கொக்கட்டிச்சோலை அமைந்துள்ளது. அத்துடன் பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி அத்துடன், இறால் வளர்ப்பு என்பனவாகும்.

இக்கிராமத்தின் மீது 28.01.1987 இல் சிறிலங்கா இராணுவத்தின் பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கொண்டவெட்டுவான், களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, கல்லடி ஆகிய இடங்களிலிருந்து கவசவாகனங்களுடன் முன்னேறிய இராணுவத்திற் குண்டுவீச்சு விமானங்களும் உலங்குவானூர்திகளும் மேலதிக உதவித் தாக்குதல்களை வழங்க கொக்கட்டிச்சோலை கிராமத்தினுள் நுழைந்த படையினர் அம்மக்களை மிகமோசமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததுடன், படுகொலைகளையும் செய்தனர்.

இதில் குறிப்பாக அமெரிகக் நிதி உதவி, கண்காணிப்புடன் மகிழடித்தீவு இறால் பண்ணை இயங்கி வந்தது. இங்கு பெருமளவு ஏழைமக்கள் வேலை செய்து வந்தனர். அங்கு வேலை செய்த நூற்றுமுப்பத்தைந்து பொதுமக்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்து இறால் பண்ணைக்குள்ளேயே போட்டதால் இறால் பண்ணை மனித உடல்களை கொண்ட இரத்தப் பண்ணைகளாக காட்சியழித்தது. அத்துடன் கொக்கட்டிச்சோலை அரிசியாலையில் தஞ்சமடைந்திருந்த இருபத்துநான்கு பேரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் 12 வயது நிரம்பிய 7 சிறுவர்களும் உள்ளடங்குவார்கள். இதில் குறிப்பாக பன்னிரண்டு வயது தொடக்கம் நாற்பது வயதிற்குட்பட்ட இருநூறிற்கு மேற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டு சித்திரவதைகளின் பின் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் பலர் காயப்படுத்தப்பட்டனர்.

மேலும் அம்பிலாந்துறை என்ற கிராமத்தில் நாற்பத்தைந்து பொதுமக்களை கொன்ற இராணுவத்தினர் அவர்களின் உடல்களை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் உட்பட பல தொடர் படுகொலைச் சம்பவங்கள் 28,29,30 .01.1987 ஆகிய மூன்று நாட்களிற்குள்ளும் கொக்கட்டிச்சோலையிலும் அதன் அயல் கிராமங்களிலும் நடந்தேறியது.

28.01.1987 அன்று கொக்கட்டிச்சோலைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்:

  1. உதயகுமார்
  2. இ.கமலாதேவி
  3. இ.கணேசமூர்த்தி
  4. இ.தங்கம்மா
  5. இ.தங்கவேல்
  6. இ.மேகலிங்கம்
  7. இ.வேலாப்பொடி
  8. இ.சிவபாதம்
  9. இராசரெத்தினம் தம்பிராசா
  10. டி.ராஜினி
  11. ந.இன்பராசா
  12. ந.குழந்தைவேல்
  13. ந.யோகேஸ்வரி
  14. ந.கோபாலப்பிள்ளை
  15. ந.சுப்பிரமணியம்
  16. ந.சுவாஜினி
  17. நா.விநோதகுமாரி
  18. கு.ரூபவதனி
  19. க.யுகாமினி
  20. க.உலகநாதன்
  21. க.நாகராசா
  22. கு.நிசாந்தன்
  23. கு.நறுமலாதேவி
  24. க.நல்லம்மா
  25. க.கந்தையா
  26. அ.சத்தியானந்தம்
  27. க.கந்தப்பெருமாள்
  28. க.கஜேந்திரன்
  29. க.கிருஸ்ணபிள்ளை
  30. க.பாலச்சந்திரன்
  31. க.புவனேஸ்வரி
  32. க.பரமேஸ்வரி
  33. க.மலர்விழி
  34. க.கோபாலப்பிள்ளை
  35. க.தெய்வநாயகம்
  36. க.சோமசுந்தரம்
  37. க.சௌந்தரராசா
  38. க.சௌந்தரராஜன்
  39. க.ஞானமுத்து
  40. கு.சந்திரசேகரம்
  41. கு.சுகந்தன்
  42. க.சுப்பிரமணியம்
  43. கு.சாந்தலிங்கம்
  44. கு.சுதாகரன்
  45. க.சுவேஜினி
  46. க.சின்னத்தம்பி
  47. கு.சிவமணி
  48. கு.விகாந்தன்
  49. .க.ரவீந்திரன்
  50. கதிர்காமத்தம்பி தயானந்தம்
  51. கி.கந்தசாமி
  52. கி.கந்தவனம்
  53. கி.குமாரதாசன்
  54. கி.பாலிப்பொடி
  55. கி.பாலசுந்தரம்
  56. கி.பவான்
  57. கி.பொன்னுத்துரை
  58. கி.றோமிகரன்
  59. கி.சின்னமுத்து
  60. கி.சிவஞானசிவம்
  61. பகங்கா
  62. பு.வேணுகரன்
  63. ப.சண்முகம்
  64. ப.சண்முகராசா
  65. பா.நடராசா
  66. பா.அம்பிகைபாலன்
  67. பா.சுதாகரன்
  68. த.இளங்கோ
  69. த.இராசேந்திரன்
  70. த.முருகேசு
  71. த.சந்திரசேகரம்
  72. த.சசிகரன்
  73. மு.நடேசன்
  74. ம.பாலசுப்பிரமணியம்
  75. மு.சத்தியசீலன்
  76. ம.சிதம்பரநாதன்
  77. மு.வசந்தராசா
  78. மா.நல்லரத்தினம்
  79. மா.கணபதிப்பிள்ளை
  80. மா.பரஞ்சோதி
  81. மா.மகேஸ்வரி
  82. மா.ஜெயந்திமலர்
  83. மா.செல்லத்தம்பி
  84. அ.குணமணி
  85. அ.பாக்கியராசா
  86. அ.பிரேமசசிகலா
  87. அ.பிரேமலதா
  88. அ.தர்சனா
  89. அ.கோமணதாஸ்
  90. அ.ரேவதி
  91. அ.சந்திரப்பிள்ளை
  92. யோ.சீதேவிப்பிள்ளை
  93. கே.நடராசா
  94. கே.அமிர்தலிங்கம்
  95. கே.சௌந்தரராசா
  96. கோ.நாராயணப்பிள்ளை
  97. கோ.அமிர்தராசா
  98. செ.பவானி
  99. சோ.இளந்திரையன்
  100. சோ.கபிலன்
  101. சோ.மாணிக்கப்பொடி
  102. சோ.விஜயலிங்கம்
  103. வே.இராசையா
  104. வே.நல்லதம்பி
  105. வே.அரியநாயகம்
  106. வே.வீசுமாப்பொடி
  107. வே.வள்ளியம்மை
  108. வேலாச்சி இராசையா
  109. ஞ.நடேசம்
  110. ஞா.குருகுலசிங்கம்
  111. சு.இராஜேஸ்வரி
  112. சு.குணதுங்கா
  113. ச.தியாகராசா
  114. ச.மகேஸ்வரன்
  115. ச.சந்தோசம்
  116. ச.சுதாகரன்
  117. சு.சிவனேசராசா
  118. சு.ஏகாம்பரம்
  119. சி.புவனேஸ்வரி
  120. சீ.புவனேசசிங்கம்
  121. சி.தில்லைநாயகம்
  122. சி.மயில்வாகனம்
  123. சி.மயிலுப்பொடி
  124. சி.மகேந்திரமூர்த்தி
  125. சி.யோகநாதன்
  126. சி.வேலாப்பொடி
  127. சி.லவன்
  128. வ.ஜீவரத்தினம்
  129. வ.குழந்தைவேல்
  130. வ.முத்துத்தம்பி
  131. வ.யோகேஸ்வரன்
  132. வ.விஜயசிங்கம்

குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments