சுதந்திரம் பெற்று விளங்கிய வன்னியின் கடைசி தமிழ்ச்சிற்றரசன் குலசேகரன் வைரமுத்து பண்டாரவன்னியன், கி.பி.1200-1550 ஆகிய காலகட்டத்தில் அடங்காப்பற்று வன்னி சிற்றரசு யாழ்ப்பாணத் தமிழ் அரசின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்டு விளங்கியது .யாழ்ப்பாணத் தமிழ் அரசு 1619 இல் போர்த்துக்கீசியர்களாலும், 1658 -இல் டச்சுக்காரர்களாலும் (ஒல்லாந்தர்) , அவர்களிடமிருந்து 1796-இல் ஆங்கிலேயர்களாலும் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணத் தமிழ் அரசு வீழ்ச்சியடைந்ததும் ,அடங்காப்பற்று அரசு எந்த அரசின் மேலாண்மையையும் ஏற்க மறுத்தது . வஞ்சகமும் துரோகமும் கொண்ட காக்கை வன்னியன் ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்தான். 1803 அக்டோபர் 31 ஆம் நாள் , ஆங்கிலத் தளபதி கேப்டன் எப்.டபிள்யூ வான்டிரைபெர்க் பண்டார வன்னியனை எதிர்பாராத வகையில் மும்முனைத் தாக்குதல் நடத்தித் தோற்கடித்தார் .1810 -இல் ஆங்கிலேயர் திரிகோணமலை , மன்னார் ,யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலிருந்து ,மும்முனைத் தாக்குதலை நடத்தினர். எவரும் வெற்றி காணாத இப்போருக்குப்பின் 1811 -இல் உடையாவூரில் போர் நிகழ்ந்து . கடுமையான காயங்களுடன் பண்டாரவன்னியன் பனங்காமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே இறந்தார்.