×

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம்

Thursday, 02 October 2008,

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் – அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி – ஜவர் காயம்!!

இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சிவலிங்கம்(48) தங்கவேலு ரகு(30) ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

நன்றி நிதர்சனம்

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

 

 

LTTE Political Head and CPA meets UNICEF Head
LTTE’s patience intentional – Thamilchelvan
Child_casualties_in_NE_released_by_Political_HQ_of_LTTE_-june

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments