×

ஊர் நோக்கி – மல்வில்

ஈழ நாட்டின் வடக்கே கிளிநொச்சி மாவட்ட நிர்வாக எல்லைக்குள் பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட ஒரு மேட்டு நிலப் பயிர்செய்கைக்கும் ஆன்மீகச் செயற்பாட்டுக்கும் பெயர்பெற்ற இடம் மல்வில். இப்பிரதேசத்தில் காணப்படும் கிருஸ்ணர் ஆலயம்  இந்த ஊர் மக்கள் மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி மக்களின் வழிபாட்டு இடமாக காணப்படகிறது. இக்கோவிலின் தீர்த்த திருவிழா உடுத்துறை கடற்கரையில் நடைபெறுகின்றது. இரு மாவட்ட மக்களின் ஆன்மீன பூமியாக மல்வில் காணப்படுகின்றது.

இதிகாசப் புராணக் கதைகளில் இராவண காலத்தில் இராமன் இலங்கை வந்தபோது, தண்ணீர் தேவைக்கு வில் ஊன்றிய இடமே விம்மல் என்ற பெருள் பெற்று, பின்னர் மல்வில் என மாறியதாக கூறப்படுகின்றது. மல்வில் குளம் அதற்கு சான்றாக வற்றாத ஊற்று உடைய சிறப்போடு காணப்படுகின்றது.

இக்கிராமத்தின் பிரதான நீர் வளங்கள் மல்வில் குளம், கோண்டாவில் குளம், கலுவில் குளம் என்பனவாகும். இங்குள்ள நீர் நில வளத்தை கொண்டு 450 ஏக்கர் தென்னைப் பயிர் செய்கையும், 10 ஏக்கர் அளவில் நெற்பயிர்ச் செய்கையும் இக்கிராமத்து மக்களால் செய்யப்பட்டு வருகின்றது. இப்பிரதேசம் முந்திரி பயிர்செய்கைக்கு ஏற்ற மண் வளத்தைக்கொண்ட பிரதேசமாகும்.

இயக்கச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் இயக்கர் காலத்து புராதன சிறப்புமிக்க தமிழ் முன்னோர்கள் வாழ்ந்த ஊராகும். குவேனி மற்றும் இராவணண் மற்றும் இயக்கர்குல மரபு தொடர்புடைய கிரமங்கள். இவைகள் இங்குள்ள கிருஸ்ணர் ஆலயம் வல்லியக்கன் என்ற எம் முன்னோர் வழிபாட்டுத் தளமாக இருந்தாக வரலாற்று ஆய்வாரள்கள். ஆரிய மற்றும் சிங்கள ஆக்கிரமிப்பு எமது பண்பாடு கலாச்சார விழுமியங்களை மெல்ல மெல்ல விழுங்கி வருகிறது என்பது உண்மை.

விடுதலைப் போராட்ட காலத்தில் மிகவும் பேசப்பட்ட இடங்கள் மல்வில், இயக்கச்சி போன்ற பிரதேசம். ஆணையிறவு விடுதலைப்புலிகள் கைபற்றியதன் பின்னர் செழிப்பு பெற்ற இக் கிராமம், மீண்டும் 2008 காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டு, பின்னர் மீளக் குடியேறி தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

– வட்டக்கச்சி
– வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments