×

ஊர் நோக்கி – மானிப்பாய் 

மானிப்பாய் 

ஈழ நாட்டின் வளம்மிக்க  வடபுலத்தில்  யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் மானிப்பாய் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.

இவ்விடம் பெயர்: மானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதன் திரிபே மானி ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம் என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் = கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன்  அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம்.

மேலும் தென்னிந்தியக் கல்வெட்டுக்களின் சான்றுகளை நோக்கும்போது ‘மானி’ என்பது கோயில்களுடன் தொடர்புபட்டிருந்த பிரமச்சாரிகளைக் குறிப்பிடுவதையும், இப்பிரமச்சாரிகள் கோயில் தொண்டுகளை மேற்கொண்டு வந்தனர் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டைச் சான்று காட்டி, மானி என்பது பிராமணர், பிரமச்சாரி, கோயிற்றொண்டர் என்ற பொருள் தந்து நிற்கின்றது என்கிறார் பேராசிரியர் நாகசாமி. அந்நிலையில் அத்தகையோர் (மாணி , மானி) இருந்த இடம் (மானி+பாய்) மானிப்பாய் எனப் பெயர் பெற்றதெனல் பொருத்தமாகும்.

மானிப்பாய் கல்வி வளர்ச்சிக்காக மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆன்மீக பணியில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேசுவரி அம்மன் ஆலயம் மற்றும் புனித பேதுரு பவுல் ஆலயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும்.

ஈழ விடுதலை போர் நடந்த காலத்தில் 1995 தில் பாரிய இடப்பெயர்வை சந்தித்து மீண்டும் நிமிர்ந்து நிற்க்கின்றது மானிப்பாய் போராட்டத்தில் பாரிய தியாகங்களை செய்து போராளிகளையும் மாவீரர்களையும் எண்ணற்ற அறிஞர்கள் கலைஞர்கள் படைப்பாளிகளை தந்த மானிப்பாய் இன்றும் தனது செழிப்பான விவசாய பூமியாக விளங்குகிறது .போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டில் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். 1620 ஆம் ஆண்டில் இவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தினைக் கைப்பற்றினார்கள்.தாம் கைப்பற்றும் நாடுகளில் கத்தோலிக்க சமயத்தினைப் பரப்பும் வழக்கமுடைய இவர்கள் மானிப்பாயில் ஒரு ஆலயத்தினைக் கட்டினார்கள்.மானிப்பாயிலே பிரான்ஸ்சிஸ்கன் (Franciscan) சங்கத்தினரால் கட்டப்பட்ட இவ் ஆலயத்திற்கு “Our Lady Do Porto” என்று பெயரிட்டனர். இப்பெயரானது போர்த்துக்கல் நாட்டிலுள்ள Do Porto என்னும் நகரத்தினுடைய பெயரோடு அர்த்தம் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

1656 இல் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரைத்தோற்கடித்து இலங்கையைக் இவர்களுடன் கைப்பற்றினர். புரட்டஸ்தாந்து மதத்தினைப்பரப்பும் குருவானவர்களும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவராகிய பல்தேயஸ் என்பவர் சோழமண்டலமும் இலங்கையும் என்னும் தாம் எழுதிய நூலில் மானிப்பாயில் இப்போதிருக்கும் தேவாலயம் 1769 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை (தேவாலயத்தைக் கட்டிய லோறன்ஸ்பில் Laurens Pul) என்ற ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். 1760 இல் யாழ்ப்பாணக்குடா நாட்டில் 182,226 கிறிஸ்தவர்கள் ஒல்லாந்தருடைய இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. 1796 இல் ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றியவுடன் சமய சுதந்திரத்தை அறிவித்தனர்.

  • வட்டக்கச்சி வினோத்
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments