கடந்த 1995 ஆம் ஆண்டு முள்ளியவளையில் ஒரு வீதி மூடப்பட்டு தமிழர் வாழ்வுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டன.
அத்துடன் மக்களின் பாவனைக்காக மாற்று வீதி ஒன்றும் அமைக்கப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தத் துயிலுமில்லம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு இராணுவ முகாமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட வீதியுள்ள காணி உரிமையாளர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தனது காணியை கையகப்படுத்தி புதிய வீதியை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
அத்துடன் மாவீரர் துயிலுமில்லம் காணப்பட்ட பழைய வீதியைத் திறப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த வீதிக்கு அருகில் வேறு வீதிகள் காணப்படுவதால் மாவீரர் துயிலும் இல்லத்தின் புனிதத்தன்மையை காக்க முன்வருமாறு மக்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.