×

நடுகல் எடுக்கும் முறைகள்: தொல்காப்பியம் கூறும் ஆறு கூறுகளை ஆராய்ந்தால்,

நடுகல் எடுக்கும் முறைகள்: தொல்காப்பியம் கூறும் ஆறு கூறுகளை ஆராய்ந்தால், அதில் நடுகல் எடுக்கும் முறை குறித்து வருவதை உணரலாம்.

1. (காட்சி) இறந்த வீரனுக்கு நடுகல் எடுக்க விரும்புவோர், நல்ல வகையான கல்லைத் தேடி செல்வர்.

2. (கால்கோள்) கல்லைத்தேடி தேர்ந்தெடுத்தவுடன், மாலையிட்டு, மது படைத்து, அக்கல்லை கொண்டு வருதல். கல்லைக் கொண்டுவரும்பொழுது பறையிசை ஒலிக்க அதை எடுத்து வருதல்.

3. (நீர்ப்படை) கல்லை கொண்டுவந்த பின், அதனை நீர்நிலைப் பகுதியில் கிடத்தி அக்கல்லை முதலில் குளிர்வித்தல், கல்லின் வெம்மை தணிந்தபின், அக்கல்லில் இறந்தவரின் பெயர், குலம், என்ன காரணமாக இறந்தார் என்பதை எழுத்தாக வெட்டுதல்.

4. (நடுதல்) கல்லை வடிவுபடுத்தி, எழுத்து பொறித்தபின் செம்மறியாடு பலியிட்டு, மலரும் மயிற்பீலியும் அலங்கரிக்க அக்கல்லை நடுதல். பின்பு மது படையல் இடுதல்.

5. (பெரும்படை) நட்டக்கல்லிற்குக் கூரை அமைத்து வழிபடுதல்.

 6. (வாழ்தல்)இறந்தவர் வழியினரும், நட்டவரும் நடுகல்லை வணங்குதல். அந்தக் கூரையே பின்னர் கோயிலாக மாறுதல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments